பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கைளை அமுல்படுத்தல் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பு 

அதிகாரிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல், நிருவாக முரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் சிபரசுகளை முன் வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுப்பதனால் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுகளில் ஏற்படும் தாமதம் போன்ற நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து … Read more

கிளிநொச்சி  மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து வருகின்றமையால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளது.  தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நாளாந்தம்  அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அதிகரித்துச் செல்லும்  அளவுக்கு ஏற்ப … Read more

“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

• வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள். “வசத் சிரிய 2024” தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெகு விமரிசையாக (27) கொழும்பு ஷங்ரீலா விளையாட்டரங்கில் நடைபெற்றது. “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகியாக அனுராதபுரம் மரதண்டகவல பிரதேசத்தை சேர்ந்த மாதவி பிரார்த்தனா மகுடம் சூடினார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பன்னிபிட்டியவை சேர்ந்த பிரபானி எதிரிசிங்க பெற்றுக்கொண்டார். “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகனாக எச்.டீ.மியூரங்க மகுடம் சூடியிருந்ததோடு அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை … Read more

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்‌ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து (27) நடத்திய புத்தாண்டு நிகழ்வுகள் டீன்ஸ் வீதி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றன. இதன் போதான பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றததோடு, முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியினால் மகுடம் அணிவிக்கப்பட்டது. அகில இலங்கை உடல் கட்டழகு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைக்கிளோட்ட போட்டியில் … Read more

பொதுவான வானிலை முன்னறிவிப்ப

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல்28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 28ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை … Read more

உள்நாடு மற்றும் வெளிநாட்டு பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன், “வசத் சிரிய 2024” புத்தாண்டுக் கொண்டாட்டம்

• புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்வையிட ஜனாதிபதியும் இணைந்துகொண்டார். “வசத் சிரிய – 2024” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று (27) காலை 7.00 மணிக்கு கொழும்பு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஆரம்பமாகியதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருந்திரளான மக்கள் ஆரம்பம் முதலே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க … Read more

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.

• நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி. சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் … Read more

கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள நிலையத்தில் GIFT திலாப்பியா மீன் குஞ்சுகள் விற்பனைக்கு

ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும். கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள  மட்டக்களப்பு  கடுக்காமுனை  மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன. மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து  பெற்றுக் கொள்ளவும். மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663 முடிந்தவரை அலுவலக நேரத்தில்  தொடர்பு கொள்ளவும் 100 வீதம் தரமான குஞ்சுகளாகும். இவை அனைத்தும்   ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும். (All Male/Monosex) மாவட்ட … Read more

மட்டக்களப்பு – வவுணதீவில் வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கி வைப்பு!!

Action unity lanka  நிறுவனத்தின்  Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (26) திகதி வவுணதீவில் இடம்பெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு 75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன. இதன் போது வவுணதீவு … Read more

காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக … Read more