தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசையில் பயணிக்க வேண்டும் – கடற்றொழில் அமைச்சர் 

சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் தேசிய நல்லிணக்கமே சாத்தியமான  வழிமுறை எனவும் கடற்றொழில்   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும், 90 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய … Read more

இன்றும் நாளையும் விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக இன்று (16) மற்றும் நாளை (17) விசேட பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் பணிப்புரைக்கமைய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பலாங்கொடை, அம்பாறை, அனுராதபுரம், பதுளை, சிலாபய், எம்பிலிபிட்டிய, கதுரேவெல, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை, கண்டி, குருநாகல், மொனராகலை போன்ற இடங்களிலிருந்து இந்த … Read more

யாழ் புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில், அரச, தனியார் பஸ்கள் பரீட்சார்த்த சேவையில் 

யாழ் நகரிலுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கையை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (15/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் தரிப்பிடத்திலிருந்து அரச மற்றும் … Read more

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 15 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

நுவரெலியா – மீபிலிபான இளைஞர் அமைப்பின் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்” இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து நேற்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டு மற்றும் கலாச்சார அம்சங்கள் பலவும் உள்ளடக்கியிருந்தன. புத்தாண்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில போட்டிகளைக் கண்டுகளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற சைக்கிளோட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பரிசுகளை … Read more

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 75 மி.மீ மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல்14ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் … Read more

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!!

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (13) காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் முன்னிலையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமையட்டும்

பிறந்திருக்கும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். ”பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டு இலங்கைவாழ் மக்களுக்கு சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும். பேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த புத்தாண்டானது, சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு பண்டிகையாக உள்ளதுடன், நாட்டின் தேசிய கலாச்சாரமாகவும் திகழ்கிறது. மக்கள் எல்லோரும் ஒன்றாக வாழக்கூடிய … Read more

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் செம்மணி வளைவு (Jaffna) பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறை சார் அதிகாரிகளும்  (12)  குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.  மேலும் யாழ் செம்மணி வளைவு பகுதியை அண்டிய நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்வைத்துள்ளது. இந்நிலையில் … Read more

சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும். புதிய சிந்தனைகளினாலேயே புத்தாக்கம் பிறக்கும். புதிய வருடம் பிறத்தல், புதிய நாற்காட்டி, பருவத்திற்குப் பருவம் ஏற்படும் புதிய மாற்றங்கள் உலக மக்களுக்கான வாய்ப்புக்களை புதுப்பிக்கின்றன. இந்த புதுப்பித்தல்களுக்குப் பின்னால் மற்றொரு மிக முக்கியமான விடயமும் உள்ளது. அதுவே சமூக ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆகும். தமிழ், சிங்களப் புத்தாண்டை உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக் கொள்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் … Read more