இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வட மாகாண ஆளுநர்
2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விலேயே ஆளுநர் இதனை தெரிவித்தார். எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். … Read more