கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!

5000 யிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்பு- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (22) விசேட இப்தார் நோன்பு திறக்கும் வைபவம் இடம்பெற்றது.  ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில்  இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இவ் இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள்  பங்குபற்றினர்.  இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் … Read more

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 23 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 22 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் … Read more

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – ஜப்பானிய தூதர் மிசுகோஷி ஹிடேகி

• ஊழலை ஒழிப்பதற்கு இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளை தூதுவர் பாராட்டு. வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தூதுவர், ஜப்பான் மீள் எழுச்சி காலத்தில் வெளிப்படுத்திய ஈடுகொடுக்கும் … Read more

நாடளாவிய ரீதியில் இளம் முச்சக்கர வண்டி சாரதிகளின் ஆளுமைகளை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டம்

இளம் முற்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் அறிவு மற்றும் திறமைகளை முன்னேற்றும் நோக்கில் பெயின்டிங், இலக்ரீசியன், நீர்க்குழாய் பொருத்துனர், சிகை அலங்காரம் மற்றும் தச்சு போன்ற துறைகளைக் கருத்திற்கொண்டு தொழிற்பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை எதிர்பார்க்கின்றது. அதற்கிணங்க, இதன் முதற்கட்டமாக கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் வேலைத்திட்டங்களை நடாத்துவதற்கு எதிர்பார்ப்பதுடன், முதற் குழுவின் நிகழ்வை 31.03.2024 இற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. … Read more

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் மாற்றம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ … Read more

சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பணிக்குழு மட்டத்திலான இணக்கம்

• இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தில் சாதகமான முன்னேற்றம். • பணவீக்கத்தை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. • அரச நிதி மறுசீரமைப்பின் பின்னர் அரச நிதி நிர்வாகம் வலுவடைந்துள்ளது. • 2024 பெப்ரவரியில் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5 டொலர் பில்லியன்களாக உயர்வு. • தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு வருமானத்தை அதிகரித்துகொள்ள வேண்டியது அவசியம். சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய … Read more

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து; தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம்: இலங்கை 128 ஆவது இடத்தில்….

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தனி நபர் வாழ்க்கைத் திருப்தி,  மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்காக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் 7 ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. . அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் … Read more

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் – சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டதானது, அரசியல் அமைப்பையும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டத்தையும் மீறியிருப்பதாகவும், உயர் … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்களுடன் ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை … Read more

காங்கேசந்துறைத் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 61.5 மில்லியன் டொலர் உதவி

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காங்கேசந்துறைத் துறைமுகத்தின் பூரண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 61.5மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் இந்தியாவிற்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். உயர் ஸ்தானிகருக்கும்  துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  விற்கும் இடையே அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் உட்பகுதியில் பாரிய கப்பல்கள் மற்றும்  நங்கூரமிடுவதற்கு … Read more