பிரதமரின் சுதந்திர தின செய்தி

எமது மூதாதையர்கள் பெருமைமிக்க வரலாற்றை உருவாக்கினார்கள். அவர்களது வழித்தோன்றல்களான நாம் அந்த பெருமைக்குரிய வரலாற்றை அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்போம். காலத்துக்கு காலம் அந்நிய பேரரசுகளின் ஆக்கிரமிப்புகளுக்கு முகங்கொடுத்து போரால், குருதியால்,வியர்வையால், போராட்டங்களால், புலமையால் ஊட்டம் பெற்று கிடைத்த சுதந்திரத்தின் 76 ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறோம். 1818 மற்றும் 1848 தேசிய விடுதலை போர்கள் உள்ளீட்ட பல போர்கள், 1948 வரை மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் தலைவர்கள் மேற்கொண்ட சிந்தனை மற்றும் புரட்சிகரமான போராட்டங்கள் மூலம் 1948 … Read more

பரசூட் சாகசம் செய்த இராணுவ தளபதிக்கு பாராட்டு

இராணுவ பரசூட் வீரராக தனது திறமையை வௌிக்காட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே (02) ஜனாதிபதி அலுவலகத்தில் பாராட்டி, கௌரவிக்கப்பட்டார். இலங்கை இராணுவத்தின் பரசூட் சாகச வரலாற்றைப் புதுப்பிக்கும் வகையில் குடாஓயா கொமாண்டோ ரெஜிமண்ட் பயிற்சி பாடசாலையில் கடந்த 22ஆம் திகதி இராணுவத் தளபதி பரசூட் சாகசம் செய்தார். இராணுவத் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக செயற்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் முயற்சியையும், அர்பணிப்பையும் பாராட்டி இராணுவ தளபதிக்கு எயார்போன் (Airborne) சின்னம் அணிவிக்கப்பட்டது. தேசிய … Read more

உலக வங்கியின் விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு, மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து மாகாண பிரதித் திட்டப் பணிப்பாளர் ஆர். ஞானச்செல்வம் … Read more

USAID இன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்திற்கான பணியகத்தின் நிர்வாக உதவியாளர் ஷனன் கிரீன் பாராளுமன்றத்துக்கு விஜயம்

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்திற்கான பணியகத்தின் நிர்வாக உதவியாளர் ஷனன் கிரீன் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் (23) விஜயம் செய்தனர். இந்தத் தூதுக்குழுவினர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். … Read more

ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (31) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவினர் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் தொடர்பில் ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் சபாநாயகருக்கு அறிவித்தார். அத்துடன், இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன்மூலம் இரு … Read more

சமூக மட்டத்திலான இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்திலான இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று (02) இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்னைகளின் நிலைப்பாடு மற்றும் புதிய பண்னைகளை அமைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது வாகரை வட்டவான் பகுதியில் 125 ஏக்கர் காணியில் இறால் வளர்ப்பு இடம் பெற்று வருகின்றது. இதேவேளை மாங்கேணியிலிருந்து கட்டுமுறிவு வரை 500 … Read more

இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான கிர்கிஸ் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அஸ்கர் பெஷிமோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் கிர்கிஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.     வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

இலங்கைக்கான துர்க்மெனிஸ்தான் உயர்ஸ்தானிகரின் நியமனம்

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான துர்க்மெனிஸ்தானின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஷலார் கெல்டினாசரோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.   வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.

குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில்

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய சமன் ஏக்கநாயக்க, தற்போது ஜனாதிபதி செயலகமாக இருக்கும் பழைய பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வாறான இளம் தலைமைத்துவம் உருவாகும் என … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய … Read more