புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் ஜனாதிபதியிடம் நன்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான் நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இன்று நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு, 01- மென்சி சிபோ டிலாமினி – எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்Mr. Menzie Sipho Dlamini High Commissioner of the Kingdom of Eswatini) … Read more

இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான முயற்சிகளுடன் பேண்தகு வர்த்தக ஊக்குவிப்பு மூலோபாயங்கள் முன்னெடுக்கப்படும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (ESCAP) இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிக்கும். – ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் அர்மிடா அலிஸ்ஜாபானா, இலங்கையில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைவதற்கான பேண்தகு வர்த்தக ஊக்குவிப்புக்கான மூலோபாயங்கள் (2024.01.31) பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (ESCAP) நிறைவேற்றுப் … Read more

அரச சேவையில் சேவை நெருக்கடி தீர்வு பொறிமுறையை அறிமுகப்படுத்த சர்வதேச தொழிலாளர் தாபனம் உதவி…

அரசாங்க சேவையில் தொழில் உரிமைகள் தொடர்பான நெருக்கடி நிலைகளுக்கான தீர்வு மற்றும் தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சர்வதேச தொழிலாளர் தாபனத்திடம் (ILO) கோரிக்கை விடுத்தார். சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் (ILO) வதிவிடப் பணிப்பாளர் ஜோனி சிம்சன் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஆகியோரை நேற்று (2024.02.01) அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், முன்மொழிவுக்கும் … Read more

76வது தேசிய சுதந்திர தின விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் தயார்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை பெருமையுடன் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (ஜன.31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி காலி … Read more

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளிகள் இன்று (02) வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் https://moe.gov.lk/ பெற்றுக்கொள்ள முடியும். மேலும், மாணவர்களின் புள்ளி மட்டங்களுக்கு அமைய, அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பரிசீலிக்க முடியும்

இலங்கை பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றார்

இலங்கைப் பாராளுமன்றத்தின் 7வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன அவர்கள் (31) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். பாராளுமன்றத்தின் 6வது படைக்கச் சேவிதராக கடமையாற்றிய நரேந்திர பெர்னாந்து அவர்கள் (30) ஓய்வுபெற்ற நிலையில், 07வது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஓய்வுபெற்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களினால் புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு (30) முற்பகல் பாராளுமன்ற … Read more

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் காரணமாக விரைவான நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் நாடளாவிய வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை இராணுவம் நேற்று (பெப்ரவரி 01 ) அரச வைத்தியசாலைகளுக்கு படையினர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவது ஆகும். அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, பல் வைத்தியசாலை கொழும்பு, … Read more

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பாகிஸ்தானின் கடற்படைக்கப்பல் ‘சைஃப்’ க்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், புதன்கிழமை (ஜன.31) பாகிஸ்தானின் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) ‘சைஃப்’ க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜன.30) இலங்கை வந்தடைந்தது. கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் முஹம்மட் அலி வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் (பதில்) வாஜித் ஹசன் ஹஷ்மி அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர், துறைமுகங்கள், கப்பல் … Read more

சுதந்திர தின ஒத்திகையின் போது காயமடைந்த பராட்ரூப் வீரர்களை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்

76வது சுதந்திர தின ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பராட்ரூப் வீரர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். ஜெனரல் கமல் குணரத்ன தனது வேலைப்பளுகளுக்கு மத்தியிலும் காலி முகத்திடல் மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த நான்கு வீரர்களின் நலம் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பராட்ரூப் … Read more

6வது சுதந்திர தின ஒத்திகையின் போது காயமடைந்த பராட்ரூப் வீரர்களை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பார்வையிட்டார்

76வது சுதந்திர தின ஒத்திகையின் போது விபத்தில் காயமடைந்த இராணுவ மற்றும் விமானப்படை பராட்ரூப் வீரர்களின் நலன்களை நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். எதிர்பாராத இந்த விபத்தை எதிர்கொண்ட இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடியதோடு, காயமடைந்த பராட்ரூப் வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார். மருத்துவமனையை … Read more