6வது சுதந்திர தின ஒத்திகையின் போது காயமடைந்த பராட்ரூப் வீரர்களை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பார்வையிட்டார்

76வது சுதந்திர தின ஒத்திகையின் போது விபத்தில் காயமடைந்த இராணுவ மற்றும் விமானப்படை பராட்ரூப் வீரர்களின் நலன்களை நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

எதிர்பாராத இந்த விபத்தை எதிர்கொண்ட இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடியதோடு, காயமடைந்த பராட்ரூப் வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.

மருத்துவமனையை விட்டு வெளியேறும் முன், அமைச்சர் தென்னகோன், மருத்துவமனை ஊழியர்களுடன் பராட்ரூப் வீரர்களின் சிகிச்சை மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவமனை ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் உடனடி சிகிச்சை மற்றும் அர்ப்பணிப்பையும் இதன்போது பாராட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.