இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பாகிஸ்தானின் கடற்படைக்கப்பல் ‘சைஃப்’ க்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், புதன்கிழமை (ஜன.31) பாகிஸ்தானின் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) ‘சைஃப்’ க்கு விஜயம் செய்தார். இக்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜன.30) இலங்கை வந்தடைந்தது.

கப்பலுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சரை கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் முஹம்மட் அலி வரவேற்றார். இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் (பதில்) வாஜித் ஹசன் ஹஷ்மி அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள், முன்னாள் தளபதிகள், உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.