தைத் திருநாள் வாழ்த்து

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது. இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அறுவடையின் … Read more

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பொதுவாக சீரான காலநிலை காணப்படும். ஊவா, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ … Read more

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கு UNDP நிறுவனம் நிதியுதவி.

மாவட்டச்செயலகத்தின் வரவேற்பு கருமபீடத்தில் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கும் பொருட்டு மாவட்டச்செயலகத்தினால் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயற்திட்டத்திற்கு தேவையான சாதனங்களை UNDP நிறுவனம் வழங்கியுள்ளது. இவ் உபகரணங்களை UNDP நிறுவன அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள்,UNDP நிறுவன அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்,மாவட்டச்செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் செயற்திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.   மாவட்ட ஊடகப்பிரிவு,மாவட்டச்செயலகம்,கிளிநொச்சி.

கிழக்கு மாகாண ஆளுனர் மட்டக்களப்பு இடைத்தங்கல் முகாம்களிற்கு விஜயம்!!

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முதரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மட்டக்களப்பில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிற்கு நேற்று (13) திகதி விஜயம் மேற்கொண்டுள்ளார். சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டுள்ளனர். இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி இடைத்தங்கள் முகாம்களையும் பார்வையிட்டு முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பொலிசாருக்கு பணிப்புரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனால் சித்தாண்டி, கிரான், வாகரை மற்றும் வாழச்சேனை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் பல இடங்களில் பிரதான வீதியை குறுக்கறத்து வெள்ளநீர் செல்வதால் அப்பகுதிகளின் ஊடாக போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாவட்ட … Read more

இலங்கை பொருளாதாரத்தின் சிறப்பான முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு

ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத்திட்டம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. ஜப்பான் நிதி உதவியில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் – ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி. இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் சுசூகி ஷூனிச்சி (H.E. SUZUKI Shunichi) பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் … Read more

2024 ஆம் ஆண்டில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்ப்பதற்குத் திட்டம்

சுற்றுலாத்துறை மூலம் 6 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே. சுற்றுலாத்துறை புத்துயிர் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டு சுமார் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 106% அதிகரித்துள்ளதாகவும் … Read more

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு IMF பாராட்டு

சவாலான பொருளாதார சீர்திருத்தங்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ஜனாதிபதிக்கு பாராட்டு. ஆசியாவிலேயே முதன்முறையாக ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பணிப்பாளர்கள் பாராட்டு. இலங்கையின் சாதகமான முன்னேற்றங்கள் சர்வதேச உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களிடையே உலகளவில் நம்பிக்கையை அதிகரிக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு – 920 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்க பாவனையாளர்களுக்கு பொருத்தமான விலையில் அவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் விலை நிர்ணயங்களை மேற்கொள்வதுடன், கட்டுப்பாட்டு விலைகளையும் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு அவை தொடர்பான கண்காணிப்புக்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ஊடாக மேற்கொண்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரனின் ஆலோசனை மற்றும் கட்டளைக்கு … Read more

ஜப்பான் நிதி அமைச்சர் கௌரவ சுசுகி ஷுனிச்சி (Suzuki Shunichi) சபாநாயகரைச் சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் நிதி அமைச்சர் கௌரவ சுசுகி ஷுனிச்சி (Suzuki Shunichi) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (12) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிட்டயாகே (Mizukoshi Hideaki) ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜப்பானின் நிதி அமைச்சர் குறிப்பிடுகையில், ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்ட கால நட்புறவு காணப்படுவதாகவும் இலங்கையின் பொருளாதார உறுதிப்பாடு … Read more