2024இல் நன்னீர் கடற்றொழிலை மேம்படுத்தும் திட்டங்கள்!

2024இல் நன்னீர் கடற்றொழிலை மேம்படுத்தும் திட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல 2024ம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக (10.01.2024) கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் குறிப்பாக, இலங்கையிலுள்ள பிரதான மீன் கருத்தரிப்பு … Read more

மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. … Read more

அடுத்த இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்

இரத்தினக்கல் பட்டை தீட்டுவோர் முதல் அனைவருக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும். ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை – ஜனாதிபதி வலியுறுத்தினார். எதிர்வரும் இரண்டு வருடங்களில் இலங்கையில் இரத்தினக்கல் துறையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் அதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த வேலைத்திட்டம் தேசிய பொருளாதாரத்திற்கும், தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, … Read more

தேசிய ரின்மீன் தொழிலை கட்யெழுப்புவதற்காக ரின்மீன் இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்படும்

தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை நேற்று முதல் (11.02.2024) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று கடற்றொழில் அமைச்சில் இலங்கை ரின்மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். இதன் போது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் அமைச்சரிடம் … Read more

பிரித்தானிய இளவரசி ஆன் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்கு விஜயம்!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் நேற்று(11) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தார். இதன்போது, முகமாலை பகுதியில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் (ஹலோ ட்ரஸ்ட்) அலுவலகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து பளை முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசங்களையும் மீள் குடியேற்றப்பட்ட மக்களையும் இளவரசி ஆன் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்து … Read more

இலங்கை வந்தடைந்த ஜப்பான் நிதியமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்

ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) இலங்கையை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பானின் நிதியமைச்சரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, ஜப்பானிய அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கும் இடையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் அறையில் இடம்பெற்ற இருதரப்புச் சந்திப்பில், இலங்கையின் … Read more

நயன வாசலதிலக பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக நயன வாசலதிலக இன்று (12) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பதுளை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்களின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வாசலதிலக இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளை, புனித தோமஸ் கல்லூரியில் … Read more

மாவட்ட அரசாங்க அதிபரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள் மிக அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் எட்டு இடைத்தங்கல் முகாம்கள் நிறுவப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோரளைப்பற்று தெற்கு கிரான் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாலையடி தோணா ஸ்ரீ முருகன் வித்தியாலய இடைத்தங்கள் முகாம், பலாச்சோலை இடைத்தங்கள் முகாம், … Read more

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!!

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (12) இடம்பெற்றது. மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இதன் போது அரசாங்க அதிபரினால் அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட்டதுடன் இதுதொடர்பாக விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர். தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்,நாசிவன் தீவில் உள்ள உயர்தர பரீட்சை எழுதும் … Read more

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டுக் கொள்கைக்காக இலங்கையின் அர்ப்பணிப்பை மத்திய கிழக்கு தூதுவர்களுடனான சத்திப்பில் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்

காசா எல்லைகளில் விரைவான போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். செயலூக்கமான பாலஸ்தீன அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதோடு காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – ஜனாதிபதி. பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிலையானதும் செயலூக்கமானதுமான பாலஸ்தீன அரசாங்கத்தை … Read more