கிழக்கு மாகாணத்தின் 3 கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு இன்றும் (11) நாளையும் (12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிமனை தெரிவித்துள்ளது. மேற்படி மட்டக்களப்பு மத்தி, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய மூன்று கல்வி வலயங்களுக்கே குறித்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (11), மற்றும் வெள்ளிக்கிழமை (12) ஆகிய தினங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, இந்த நாட்களுக்கு பதிலாக இம்மாதமே … Read more

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டாபிங் மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் இடையில் நேற்று (10) சந்திப்பொன்று இடம்பெற்றுது. இதன்போது இந்தோனோசியாவில் நடைபெறவுள்ள நீர் சம்பந்தமான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தூதுவர் அமைச்சர் ஜீவனுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார காரணிகள் தொடர்பிலும் இருவரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். மேலும், அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள், … Read more

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் சாத்தியம்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு,வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் … Read more

குடிநீர் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான புதிய தேசிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களின் கருத்துகளை கோருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான புதிய தேசிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்வைத்து அவர்களின் கருத்துகளை கோருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல்துறை மறுசீரமைப்புக்கான வழிநடத்தல் குழு இன்று கூடியது. கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் நடைபெற்றது. ‘ குடிநீர் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான புதிய தேசிய கொள்கைகள் மற்றும் நீர் வழங்கல் இணைப்புகள் தொடர்பான புதிய வழிகாட்டல்களை பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.’ – என்று இதன்போது … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் உள்ளூர் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (09) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புலிபாஞ்சகல் … Read more

கடந்த ஆண்டுகளில் நிலுவையாகவிருந்த சகல பட்டியல்களும் செலுத்தப்பட்டுள்ளது. – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய

2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி வரையான வரையறுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் கீழ் முன்வைக்கப்பட்ட சகல பட்டியல்களை முழுமையாக செலுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல சபை ஒத்திப்போடும் போதான விவாதத்தில் கலந்துகொண்டு, முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, 2022 ஆம் ஆண்டில் … Read more

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக பட்ச மழையாக 174மில்லி மீற்றர் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 174மில்லி மீற்றர் வாகனேரியில் பெய்துள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஆறு அடி உயரத்தில் வான்கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேறுகின்றது. . மயிலம்பாவெளி பிரதேசத்தில் 130மில்லி மீற்றர் மழையும், தும்பங்கேணியில் 112.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. உருகாமம் பகுதியில் 103.9 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், 28 அடி உயரத்தில் … Read more

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம்

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்படும் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய புனரமைப்பிற்கான அடிக்கல் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் நாட்டி வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைக்காக ஒரு தொகுதி புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 16 பேர் கொண்ட இந்த அணிக்கு வனிந்து ஹசரங்க தலைவராகவும், சரித் அசங்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதியின் அடிப்படையில் பெதம் நிஸ்ஸங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா, சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். முதலாவது இருபதுக்கு 20 போட்டி … Read more

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டியை இலவசமாக கண்டுகளிக்க வாய்ப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை இலங்கை விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி நாளை (11) போட்டி நடைபெறும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தின் C & D மேல் மற்றும் கீழ் பார்வையாளர் மண்டபங்களில் இருந்து (“C & D Upper and Lower Stands”) பார்வையிடுவதற்கு நுழைவுக் கட்டணம் இன்றி இலவசமாக உட்பிரவேசிக்க முடியும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம்; அறிக்கை ஒன்றை … Read more