வட மாகாணத்தில் நாளை சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்று காலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளநவம்பர் 26 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தொகுதி இன்று காலை 0830 மணியளவில் திருகோணமலைக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 600 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என … Read more