மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வெள்ளம்: 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் நாட்களாகப் பெய்து வரும் காரணமாக மாவட்டத்தில் அனர்த்த நிலை ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளின் வீதிகள், வீடுகள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என பல வெள்ள நீரால் நிரம்பியுள்ளன. அதற்கிணங்க இன்று (10) காலை ஒன்பது மணி வரையான காலப்பகுதிக்கான மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையின் பிரகாரம் 5,461 குடும்பங்களில் 17,531 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 5 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் … Read more

அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” – நூல் வெளியீடு

அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” – நூல் வெளியீடு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வினால் எழுதப்பட்ட “2024 வரவு செலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு” தொடர்பான நூல் வெளியீடு இன்று (10) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 7 இலங்கை மன்றக் கல்லூரியில் அமைந்துள்ள இடம்பெறவுள்ளது.

சமிந்த விஜேசிறி இராஜினாமா –  பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆ.குக்கு எழுத்துமூலம் அறிவித்தார்   

சமிந்த விஜேசிறி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார் பதுளை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். சமிந்த விஜேசிறி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் … Read more

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு

? சிறப்புரிமை மீறல் தொடர்பில் விதிக்கப்படக் கூடிய அதியுச்ச தண்டனை… பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் எவரேனும் உறுப்பினர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையொன்றில், வெவ்வேறான இரண்டு தவறுகள் அல்லது அதிலும்கூடிய ஒரு எண்ணிக்கைக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளபோது, அத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர் அத்தகைய குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டுள்ளவிடத்து, காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) … Read more

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் தொடரும்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் … Read more

மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!!

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் முன்வைத்த நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக. மட்டக்களப்பில் இருந்து தூர இடங்களுக்கான புகையிரதசேவையை முன்னெடடுக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கான கள விஜயத்தினை முன்னெடுத்திருந்த போது குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!!

மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார். இதன்போது முதற்கட்டமாக 19 பயனாளிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன், மண்முனைப்பற்று … Read more

பட்டிப்பளையில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிப்பு!!

பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம் பெற்றது. 2023 ஆம் ஆண்டு விசேட வீட்டு திட்டத்தின் கீழ் சமுர்த்தி ரன்விமன வீடுகள் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவின் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வலயத்தில் முனைக்காடு கிழக்கு, முதலைக்குடா மேற்கு ஆகிய பிரிவுகளில் இவ்வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் 7.5 இலட்சம் ரூபாய்கள் பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். … Read more

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து நவகிரிநகர் முப்பத்தெட்டாம் கொலனிக்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!!

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மட்டக்களப்பு பேரூந்து சாலைக்கு விசேட கள விஜயத்தினை முன்னெடுத்திருந்தார். lஅதன்போது கிழக்கு பிராந்தியத்திற்குட்பட்ட பேரூந்து சாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பேரூந்து சாலை முகாமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். … Read more

ஒவ்வொரு வியாபாரிகளும் VAT வரி செலுத்தினால், செலுத்தப்படும் வரி சதவீதத்தை குறைக்க முடியும்… – அமைச்சரவைப் பேச்சாளர்

VAT வரி செலுத்துபவர்கள் அனைவரும் வரி கோப்புக்களை வைத்திருந்தால் மற்றும் VAT வரி செலுத்தும் ஒவ்வொரு வியாபாரிகளும் தாம் செலுத்த வேண்டிய வரித் தொகையை செலுத்தினால், கிடைக்கப் பெறும் வருமான அதிகரிப்பினூடாக VAT வரி செலுத்த வேண்டிய சதவீதத்தை குறைக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு … Read more