அரச நாடக விருது விழா ஜனாதிபதி தலைமையில்

இலங்கையின் அரங்கியற் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய படைப்பாளர்களை ஊக்குவித்து பாராட்டுவதற்கான அரச நாடக விருது விழா – 2022 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற அரங்கத்தில் (19) நடைபெற்றது. புத்த சாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைச் சபையின் அரச நாடக ஆலோசணைக் குழு ஆகியன இணைந்து 50 வது தடவையாக அரச நாடக விழா – 2022 இனை ஏற்பாடு … Read more

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகிறது. இம்முறை க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இவ்வருடமும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. . நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 … Read more

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் கிறிஸ்மஸ் கரோல் கீத நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுயில் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் விஷேட கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வு மற்றும் கிறிஸ்மஸ் வலயம் ஆகியவற்றை நேற்று (20) ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதி செயலக வளாகத்தில் மின்விளக்குகளை ஏற்றி இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கிறிஸ்மஸ் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார். நேற்றைய கிறிஸ்மஸ் கரோல் இசை நிகழ்வு … Read more

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த, விரிவான மூலோபாய அடிப்படையில் செயற்பட வேண்டும். – ஜனாதிபதி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய அடிப்படையில் நாம் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய சவால்களை எதிர்கொண்டால், அடுத்த ஒரு சில வருடங்களில் இலங்கையின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிசெய்யவும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளவும் முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (20) நடைபெற்ற உள்நாட்டு இறைவரி ஆணையாளர் சங்கத்தின் 19ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு … Read more

பொதுமக்கள் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவு சொத்துக்களில் கைவைக்க வேண்டாம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள்.. புதிய வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அனைத்து ஆளுநர்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் 2023.12.19 அன்று … Read more

வடமேற்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பத்தலங்குண்டுவ மற்றும் உச்சமுனே கடற்பரப்பில் 2023 டிசம்பர் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் மூன்று (03) டிங்கி படகுகள், 1995 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

பிரதம உயர் சிறு அலுவலர் டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார கடற்படை பிரதம உயர் சிறு அலுவலர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் சிரேஷ்ட மாலுமிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்ட கடற்படை பிரதம உயர் சிறு அலுவலர் (MASTER CHIEF PETTY OFFICER OF NAVY – MCPON) பதவிக்காக பிரதம உயர் சிறு அலுவலர் டபிள்யூ.எம்.ஜி.ஏ.குமார என்ற சிரேஷ்ட மாலுமி (2023 டிசம்பர் 19) நியமிக்கப்பட்டார். குறித்த பதவியின் அடையாளமான ஆர்ம் பேண்ட் மற்றும் பட்டன் ஆகியவற்றைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களினால் கடற்படைத் தலைமையகத்தில் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த புதிய … Read more

தற்போது பெய்து வரும் மழை நிலைமை இன்று (20) முதல் எதிர்வரும் நாட்களில் தற்காலிகமாக குறைவடைய வாய்ப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தற்போது பெய்து வரும் மழையின் அளவு இன்று (20) முதல் எதிர்வரும் நாட்களில் தற்காலிகமாக குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும், பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் … Read more

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமான பெறுபேறுகளைக் காட்டியுள்ள வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை

கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதற்காக இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்த அவர், … Read more

முழுமையான காலநிலை முன் எச்சரிக்கைக்கான பிரிவு ஜனாதிபதி தலைமையில் அறிமுகம்

அனர்த்தங்கள் தொடர்பான முன் எச்சரிக்கை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேலும் பாதுகாக்கும் விதமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் SLT Mobitel, Hutch, Dialog, Airtel உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து முழுமையான அனர்த்த முன் எச்சரிக்கை பொறிமுறையொன்றை வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அனர்த்த … Read more