ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்

மின்கட்டணத் திருத்தத்தில் VAT எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி … Read more

இந்தியப் பாடல் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி வாழ்த்து!

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் “Zee Tamil” தொலைக்காட்சி அலைவரிசை நடத்திய சரி கம பா “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய இலங்கையின் கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 14 வயதுடைய கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், இலங்கைப் பெண் ஒருவர் இந்திய தொலைக்காட்சி பாடல் போட்டியில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். கில்மிஷா உதயசீலன் நாட்டிற்கு புகழ் சேர்த்தமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி … Read more

இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய எதிர்பார்ப்பு

2023-2025 வரையான காலப்பகுதியில் இலங்கை திறந்த அரச கூட்டிணைவு தேசிய செயல் திட்டம் தொடர்பில் மக்கள் கருத்தறிய ஜனாதிபதி செயலகம் எதிர்பார்க்கிறது. “திறந்த அரச கூட்டிணைவு” என்பது சிவில் சமூக மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான கூட்டிணைவின் ஊடாக வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் திறந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகும். இதுவரையில் 75 நாடுகளும், 104 உள்ளூராட்சி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கிலான சிவில் சமூக அமைப்புக்களும் திறந்த அரச கூட்டிணைவு வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டுள்ளன. திறந்த அரச … Read more

இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெரிவு

இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி அண்மையில் (12) தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – மியான்மர் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யூ. ஹான் தூ (U. Han Thu) இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் … Read more

100 கிலோகிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி

100 கிலோகிராம் போதைப்பொருட்களை அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி – நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட குழுவில் நீதி அமைச்சு தெரிவிப்பு போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறைகள் தொடர்பில் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் குழுவில் சமர்ப்பிப்பு 100 கிலோகிராம் போதைப்பொருட்களை குறித்த தினங்களில் அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதாகவும், அதற்கமைய அதற்கான தினம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டில் வேகமாகப் … Read more

சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் “தங்கமான யோசனை 2023” பரிசுளிப்பு நிகழ்வு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் சிறு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாடசாலை மட்டத்திலிருந்தே சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களிடையே “தங்கமான யோசனை 2023” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான … Read more

IMF உடனான வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு அனைத்து அரசியல் தலைவர்களிடமும் ஜனாதிபதி கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தை நிராகரிக்கும் அனைவரும், நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றுவதற்கான நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொறுப்புக்களை ஏற்காமல் மக்களை மகிழ்விக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் அரசியலானது நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பிரபல்யமான கருத்துக்களை வெளியிடும் எவரும் கடினமான தீர்மானங்களை எடுக்கத் … Read more

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில் பொதுமக்களின் கருத்தறிந்தது

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை சந்திப்புக்கள் நடத்தப்பட்டன. இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் … Read more

புதிய வெளிவிவகாரக் கொள்கையில் சமாதானத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இலங்கை ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் பிரவேசிக்கிறது – ஜனாதிபதி

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அமைதி காக்கும் பணிகள் பாதுகாப்பு அமைச்சுடன் மாத்திரம் இணைக்கப்படும் பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து விலகி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பில் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் அண்மையில் (15) நடைபெற்ற வர்ணங்கள் வழங்கல் மற்றும் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

அரசாங்கங்கள் மாறும்போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கான அடிப்படை பணிகள் அடுத்த வருடம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இவ்வாறு … Read more