“இலங்கையின் முதலாவது இளநீர் ஏற்றுமதி கிராமம்” முறுதவெல மேட்டு கிராமத்தில் ஆரம்பம்

இலங்கையின் முதலாவது இளநீர் ஏற்றுமதி கிராமம் முறுதவெல மேட்டு கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே இவ்வளவு பெருந்தோட்ட பயிராக அன்றி வீட்டுத்தோட்ட செய்கையாக இடம் பெறும் இளநீர் உற்பத்தி முதலாவது தடவையாக ஏற்றுமதி நோக்கத்துடன் உற்பத்தி செய்யப்படும் பயிராக உற்பத்தி செய்கை பண்ணுவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் நடவடிக்கை (14) எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஒரு உள்ளூர் தாவரமான இளநீர் தாவரம் தற்போது நமது நாட்டிற்கு டாலர்களை பெற்று தரும் பிரதான தாவரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வளவு … Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மற்றும் மனிதவள அபிவிருத்திக்காக அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (19) நடைபெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இவ் ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே ஜே முரளிதரன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களை அமுல்ப்படுத்தி, அவற்றை மாவட்டத்தின் முன்னேற்றத்தில் … Read more

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் இந்திய மக்களவை சபாநாயகரைச் சந்தித்தனர்

? இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் மாநிலங்கள் அவையின் தலைவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் கௌரவ ஓம் பிர்லாவை அண்மையில் சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே காணப்படும் நெருங்கிய உறவுகளை தொடர்ந்தும் வலுவான … Read more

இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்ற முதல் தொழிலாளர் குழு நாட்டில் இருந்து பயணமானது

இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழிலுக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணமானது. இந்தக் குழுவில் முப்பது பேர் இடம்பெற்றுள்ளதுடன், மேலும் இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் செல்லவுள்ளதாகவும், முப்பது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) இரவு இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில்,இஸ்ரேலில் விவசாயத் … Read more

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நடராஜா சிவலிங்கம் பதவியேற்பு!!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரி நடராஜா சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (18) திகதி கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நியமனத்தினை பெற்று தனது கடமையினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றுள்ளார். காரைதீவைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சேவையாற்றி வரும்வேளையில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. சிறந்த நிருவாகியான பொறியியலாளர் சிவலிங்கம் ஏலவே கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை ஆணையாளராகவும் கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி … Read more

நடைமுறையில் காதி நீதிமன்றங்கள் அனைத்துமே மிகவும் குறைந்த வளங்களோடு செயல்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய சமூகக் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்டு இயங்கி வரும் காதி நீதிமன்றங்கள் அனைத்துமே மிகவும் குறைந்த வளங்களோடு செயல்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் தெரிவித்தார். திருமணத்திற்குப் பின்னரான குடும்ப வாழ்வில் விவாகரத்து உட்பட இன்ன பிற காரணங்களால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க சமூக பொறுப்புக் கூறும் வகையில் காதி நீதிமன்றங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான சமூகப்பங்களிப்பைத் திட்டமிடும் மாநாடு அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார். காணி உரிமைகளுக்கான … Read more

இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புப் படைகளின் பொறுப்புகளை யாராலும் மட்டுப்படுத்த முடியாது.

• இக்கட்டான சூழ்நிலைகளில் தலைமை தாங்க பயப்பட வேண்டாம் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினருக்கும் உண்டு என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன மற்றும் மத ரீதியாக எவரேனும் … Read more

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்..

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர்17ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 16ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ … Read more

பொரலந்தை – ஹோர்டன்தென்ன வரை அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

  பதுளை மாவட்டத்தில் கட்டிடத் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் போது அது தொடர்பான அளவுகோள்களின்படி செயற்படுவது கட்டாயம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை புதிய திட்டமொன்றை ஊடாக மீளக் குடியமர்த்த வேண்டும் அடுத்த ஆண்டு முதல், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு மாவட்டங்களுக்கு வழங்கப்படும் பதுளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு பொரலந்த தொடக்கம் ஹோர்டன்தென்ன வரையான ஒஹிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற நிர்மாணங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட … Read more

நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு)  (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இப்பிரியாவிடை சந்திப்பின் போது, இரு பிராந்திய நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆற்றிய பணியை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார். இலங்கையின் கலாச்சாரம், அழகு மற்றும் அதன் … Read more