நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இப் பிரியாவிடை சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, இலங்கையில் கப்டன் கெய்னின் சேவைக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஆயுதப் படைகளுடன் அவர் பேனிய சிறந்த உறவு, இராணுவ இராஜதந்திரம் மற்றும் நல்லெண்ணம் … Read more

வளி மண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வளிமண்டலத்தில் காணப்படும் அலை போன்ற மாறும் தளம்பல் நிலை காரணமாக, இன்று (14) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலைமையில் தற்காலிக அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை, … Read more

நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் செல்லும் வழியைத் தவிர வேறு வழியில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது மற்றும் கடன் மறுசீரமைப்பு இல்லாமல் போனால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். பல அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். வைப்புக் காப்பீட்டுக்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் – வங்கி மற்றும் நிதித் துறை 100% பாதுகாப்பானது. இந்த நாட்டில் கடன் பத்திரங்கள் மீண்டும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன – சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. பொருளாதாரம் … Read more

‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் (12) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். சமாதானமான மற்றும் சுபீட்சமான இலங்கைக்கு அவசியமான 6 முக்கிய விடயங்கள் அடங்கிய … Read more

தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகம் தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் குழு கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கூடிய போது கொள்கை உருவரைச்சட்டகம் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்ததுடன், இதில் சமுகமளித்திருந்த உறுப்பினர்கள் பல யோசனைகளை முன்வைத்திருந்தனர். … Read more

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக உதயன கிரிந்திகொட தெரிவு

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட அண்மையில் (11) தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் … Read more

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் – வலுசக்தி அமைச்சர்

மின்சார நிலையங்களை அண்டிய பிரதேசங்களில் போதிய மழை வீழ்ச்சி காணப்படுவதனால் ஏதேனும் நன்மை காணப்படுவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின்சாரப் பட்டியலைத் திருத்தக்கூடியதாக இருக்கும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாடு நீண்ட காலமாக முரையான வரிக் கொள்கையைப் பின்பற்றாமை மற்றும் பல்வேறு உதவிகளின் கீழ் … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் “காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய நிழ்ச்சித் திட்டம் (Climate Smart Irrigated Agriculture Project) “

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் “காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய நிகழ்ச்சித் திட்டம் (Climate Smart Irrigated Agriculture Project)” தொடர்பான 7ஆவது மாவட்ட வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான உதவித் திட்ட பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. காலநிலை மாற்றத்திற்கு … Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு மாநாடு!!

பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி பிள்ளை நேய சூழலை உருவாக்கும் விதத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாணவர் தூதுவர் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்களை உள்ளடங்கிய சிறுவர் பாதுகாப்பு மாநாடு (13) மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சகல கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய மாணவ தூதுவர் … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி (Marc Andre Franche) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரிற்கு மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாகவும் … Read more