இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்க ஜைக்கா நிறுவனம் உறுதி…

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா, ஜைக்கா நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) விசேட ஆலோசகர் கலாநிதி ஷினிச்சி கிடோகா 2023.12.11 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார். ஜைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி ஷினிச்சி கிடாவோகா, எதிர்கால உதவித் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் அபிவிருத்தித் தேவைகளை … Read more

32 நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில்..

32 நாடுகள் பங்கேற்கும் தென்சீனக் கடல் பிராந்திய பௌத்த வட்டமேசை மாநாடு இந்த நாட்களில் இலங்கையில் இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்த மாநாட்டின் தலைவரான சீனாவின் யின் ஷுன் தேரர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை 2023.12.12 அன்று அலரி மாளிகையில் சந்தித்தார். கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், சீனத் தூதுவர் சி ஷென் ஹாங், சீன தேசிய சமய விவகாரங்கள் நிர்வாகத் தலைவர் சென் ரே பொங் மற்றும் … Read more

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தனர். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (டிசம்பர் 11) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இவ் அமைப்பின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு பொறுப்பான பிரதி இயக்குநர், கலாநிதி வலேரி பெமோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டனர்.தெற்காசியாவில் தயார்நிலை மூலம் நிலையான தேசிய எதிர்பார்ப்பு நடவடிக்கையை (SNAP) … Read more

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் (டிசம்பர் 11) இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகைதந்த இவ் அமைப்பின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் அவசரகால நிலைமைகளுக்கு பொறுப்பான பிரதி இயக்குநர், கலாநிதி வலேரி பெமோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டனர். தெற்காசியாவில் தயார்நிலை மூலம் நிலையான … Read more

கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பு அவசர செயற்பாட்டு மையத்தில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது. கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் (டிசம்பர் 11) இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. பதுளை மாவட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாய நிலைமை குறித்து கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. ஹல்தும்முல்ல கெலிபனாவெல மலையில் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் … Read more

பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் அப்பியாசக் கொப்பிகள்; வழங்கும் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தை அச்சகத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். இன்று (13) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்படி குறித்த பாடசாலை அதிபர்களின் தலையீட்டுடன், இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாடசாலை மாணவர்களின் அப்பியாசக் கொப்பிகளின் அதிக விலை குறித்து இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் … Read more

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான திட்டங்கள் – அதுவரை எஸ்.டி.எஃப் அதிகாரிகளை உட்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு உரிய பாதுகாப்புத் திட்டம் வகுக்கும் வரை எஸ்.டி.எஃப். அதிகாரிகளை பாதுகாப்புப் பணியில் உட்படுத்த கால அவகாசம் வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடமும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார். நிலையியற் கட்டளைகள் 27/2 இன் கீழ் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூலக் … Read more

ஹிங்குராங்கொடயில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க திட்டம்

ஹிங்குராங்கொட விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்து அதன் அருகாமையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டம் உள்ளதாகவும், அடுத்த வருடம் அது நடைமுறைப்படுத்தப்படும் எனறும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிராம மட்டத்தில் சிறிய மைதானங்களை நிர்மாணிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சிதத் வெத்தமுனி, அரவிந்தத சில்வா மற்றும் இலங்கை வர்த்தக … Read more

எகிப்திய தூதுவர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மாஜித் மோஸ்லே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் எகிப்திய தூதுவருடன் சுமுகமான கலந்துரையாடலை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பாதுகாப்பு, மற்றும் மூலோபாய கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தூதுவர் மொஸ்லே, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால உறவுகளைப் … Read more

சிங்கப்பூர்-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை சிங்கப்பூர் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ள பிரதமர் லீ சியென் … Read more