மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்காவின் விசேட பிரதிநிதி அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இன சமத்துவம் மற்றும் நீதிக்கான விசேட பிரதிநிதியான டிசைரீ கோர்மியர் ஸ்மித், நேற்று அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தினார். கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற … Read more

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான புதிய திருத்தப்பட்ட சட்ட மூலம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மீன்பிடிப் படகுகளில் Battery Motors போன்ற எரிபொருள் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தப்படுவதால் மீனவர்களின் உற்பத்திச் செலவு குறைவதோடு, அதன் மூலம் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே … Read more

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாட்டை நடாத்தும் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாட்டை நடாத்துவதற்கான அந்தஸ்து இலங்கைக்குக் கிடைத்துள்ளது. அதற்கிணங்க இம்மாநாடு ஆசிய பசுபிக் வலயத்தின் 40 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 270 நபர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்வரும் 2024 பெப்ரவரி 19 முதல் 22ஆம் திகதி வரை கொழும்பில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடாத்தப்படவிருப்பதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். … Read more

உலக வங்கியின் பிரதானி சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் நச்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் நேற்று (11.12.2023) கொழும்பு, அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள … Read more

பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் 100வது பிறந்தநாள் விழா ஜனாதிபதி தலைமையில்..

பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் 100வது பிறந்தநாள் விழா பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023.12.10 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ’ஸ்டான்லி விஜேசுந்தர AI நிலையம் அடையாள ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது. நிகழ்வின் பிரதான உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், நாரஹேன்பிட்டி அபயராமயவின் விகாராதிபதி சங்கைக்குரிய … Read more

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை – கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்கி வைத்து விலை உயர்த்துவதை தடுப்பதற்கு, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அமைச்சரவை தீர்மாணித்துள்ளது என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாட்டினுள் போதுமான அளவு அரிசி இருப்பு இருக்கும்போது, சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி பற்றாக்குறை ஒன்று இருப்பதாக காட்ட முயற்சிப்பது, இந்த பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிக்க முயற்சிக்கும் உபாயமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். நுகர்வோர் பாதுகாப்புச் … Read more

நாட்டின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற் கல்வியை பயன்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்.

நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல அறிவு பூர்வமான மனித வளம் தேவை. இலங்கையை பல்கலைக்கழகங்களின் கேந்திர நிலையமாக வேண்டும். – NSBM பசுமைப் பல்கலைக்கழக 2023 பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதற்கு அறிவாற்றல் மிக்க மனித வளம் தேவை என்று தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் பல்கலைக்கழகத் … Read more

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அமைச்சர் மஹிந்த அமரவீர

இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரலாற்றில் முதல் தடவையாக பயிர் சேதத்தின் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கியமைக்காக ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சு பாராட்டப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் … Read more

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மீன்பிடிச் சட்டம்

மீனவ சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் மீன்பிடி சட்டமூலம் முன்வைப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தில் இன்று (11) கலந்துகொண்டு உரையாற்றும்; போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சட்டமூலத்தை முதலில் தயாரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கடற்றொழில் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் … Read more

தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு வரலாற்றில் இம்முறை பட்ஜெட்டிலே கூடுதல் நிதி ஒதுக்கீடு

பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் கொலையானது நாட்டின் விஞ்ஞானத் துறைக்கு ஏற்பட்ட பாரிய மனித வள இழப்பாகும் பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் நினைவு தின விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு கொழும்பு பல்கலைக்கழகத்தின் “ஸ்டென்லி விஜேசுந்தர AI மையம்” ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது நாட்டின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை … Read more