ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கை – அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது

ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பாக தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று வெகுசன ஊடக அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். மின்னியல் அதிகாரசபை சட்டத்தில் எவ்வித தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லை. அச்சட்டத்தின் ஊடாக மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பல்வேறு தவறுகள் மற்றும் அநீதியான சந்தர்ப்பங்களில் அதற்காக … Read more

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் 66 வருடத்தை முன்னிட்டு நினைவு முத்திரை

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட 66 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல குணவர்தன அவர்களால், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே உள்ளிட்ட பிரமுகர்களுக்கு நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இலங்கையில் உத்தியோகபூர்வ இராஜதந்திர … Read more

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது சேவை காலத்தை முடித்து இந்தியா திரும்புவதற்கு முன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் நேற்று (2023.12.10) சந்தித்தார் .தனது பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமுறாது என்றும் தெரிவித்தார். தனக்குப் பின்னர் நியமிக்கப்படும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தனக்குப் போன்றே ஆதரவு கிடைக்கும் என தான் … Read more

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.1700 அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தரவும்!

  பெருந்தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோட்டக் கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன்  (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை … Read more

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது

  ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம் சரணடையாமல் அனைத்து நாடுகளுக்கும் நட்புறவின் கரங்களை நீட்டியதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை பெற முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் … Read more

இந்நாட்டின் கிரிக்கெட்டை அரசியல் தலையீடின்றி பேணுவதே நோக்கமாகும்

  நிதி நிர்வாகம் மற்றும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான ஒரு சுயாதீன நிதியம்_ 2030 இல் கிரிக்கெட் விளையாட்டு எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது_ – ஜனாதிபதி இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதனால் தான் இந்த வருட வரவு … Read more

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கது..

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், முன்வைத்துள்ள முன்மொழிவை வரவேற்கின்றேன் என்று நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் நியாயமான ஒரு சம்பள உயர்வை பெருந்தோட்ட கம்பனிகள் வழங்க வேண்டும் எனறும் அழைப்பு விடுத்துள்ளார்.. எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்ட கம்பனிகள் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் … Read more

ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது

அக்ரா கானாவின் ‘2023 ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள்’ கூட்டம் 2023 டிசம்பர் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறப்புப் பிரதிநிதி/விசேட தூதுவர் கௌரவ ரோஹித போகொல்லாகம ஆகியோர் கலந்துகொண்டு, ஐ.நாடு அமைதி காக்கும் பணியில் இலங்கையின் கூட்டு அர்ப்பணிப்பு, இலங்கையின் நாட்டு அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான உறுதிமொழிகளை வழங்கினர். ஆரம்பத்தில், இலங்கை மக்கள் சார்பாக இலங்கை … Read more

நாட்டின் இளைஞர்களை இணையத் தீவிரமயமாக்களிலிருந்து பாதுகாக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன்

தெற்காசிய பிராந்தியத்தில் இளைஞர்களின் இணையத்தள தீவிரமயமாக்கல் என்பது ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. முறையான கல்வி, ஒத்துழைப்பு, சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் மேம்படுத்துவதன் மூலம், தீவிரவாத சிந்தனைகளை எதிர்க்க நமது இளைஞர்களை வலுப்படுத்த முடிவதுடன் பிராந்தியத்தில் அமைதியும் இணக்கப்பாடும் நிலவ வழிகோலும். “Search for Common Ground with Meta (Facebook), Skype, Twitter மற்றும் Messenger” ஆகிய நிறுவனங்களால் (டிசம்பர் 07) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களை தீவிரமயமாக்களில் இருந்து … Read more