அடுத்த வருட இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்ப்பு

அடுத்த வருட இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ நேற்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் காணி அமைச்சின் செலவீன தலைப்புகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் இறுதியில் 04 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. இவ்வருடம், இதுவரை … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தொல்லியல் மற்றும் தொல்;பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அரசாங்கம் கவனம்

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தொல்லியல் மற்றும் தொல்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொல்லியல் பெறுமதி வாய்ந்த விடயங்களில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் தொடர்பில் பாhளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதான எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் தொல்பொருள் இடங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் பொதுமக்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் … Read more

பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களைப் பாதுகாத்தது. – பிரதமர் தினேஷ் குணவர்தன

இன்னும் சில மாதங்களில் கிராம உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படும். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (06) நடைபெற்ற “புதியதோர் கிராமம் – பதியதோர் தேசம்” தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கம்பஹா மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் – கடந்த ஆண்டு நாம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம். அரசியல் ரீதியாக நன்மை தீமைகள் இருந்தாலும், … Read more

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். மலையக தமிழ் மக்களை எவ்வாறு இலங்கைச் சமூகத்துடன் முழுமையாக இணைப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வடிவேல் சுரேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அது தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, அந்த மாவட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன், பெண்கள் … Read more

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

மனித கடத்தலை தடுத்து நிறுத்துவது குறித்து 13 மாவட்டங்களை உள்ளடக்கிய 39 பிரதேச செயலாளர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமொன்று தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் ஏற்பாட்டில் (டிசம்பர் 04) கொழும்பு ரமடா ஹோட்டலில் ஆரம்பமானது. இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய மனித கடத்தல் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை மற்றும் மாலைதீவுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதித் தலைவர் அன்ட்ரூ கிரே அவர்களும் … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு. 2023 டிசம்பர் மாதம் 07ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி … Read more

சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அதற்கான இணக்கத்தை தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் 150 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடவிருக்கும் சட்டக்கல்லூரி 3 ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது எனவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியொன்றை சட்ட கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை … Read more

புதிய கல்வி சீர்திருத்தம் 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்காலத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சை தரம் 10 இலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தரம் 12 இலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் … Read more

வகுப்பறைக்கான டிஜிட்டல் அடித்தளமாக எமது பாடசாலை கல்வி முறை மாற வேண்டும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் களு அக்கலை ஸ்ரீ சித்தார்த்த கனிஷ்ட வித்தியாலயத்தில் 2023.12.04 அன்று இடம்பெற்ற புதிய கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், நாடு தழுவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அந்த நேரத்தில், கல்வி முறையும் வகுப்பறையும் மிக வேகமாக மாறும். எனவே, இப்பிரதேசங்களில் இந்தச் செயற்பாடுகளுக்கு நாம் அடித்தளமிடும் வகையில் … Read more

எகிப்து தூதுவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே (Maged Mosleh) அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். எகிப்து மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் 66 வருட இரு தரப்பு உறவுகள் தொடர்பில் சபாநாயகர் மற்றும் தூதுவருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடுதல் மற்றும் இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குப் பல்வேறு … Read more