நெதர்லாந்தினால் மீளக் கையளிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மக்கள் பார்வைக்கு

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நேற்று (05) தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நெதர்லாந்தின் பிரசித்தமான Rijks அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த, தங்கத்தால் தயாரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட … Read more

மட்டக்களப்பில் பாதுகாப்புப் படையினரின் கல்விப் பணி

மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு 232 வது இராணுவ படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கல்வி கருத்தரங்கானது இன்று ஆரம்பிக்கப்பட்டு 8 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம் பெறவுள்ளது. மாணவர்களின் பாண்டு வாத்தியம் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது. இந் நிகழ்வானது 23ஆம் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் கரடியனாறு மகா … Read more

இந்த வருடத்திற்கான சர்வதேச நீர் மாநாடு டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன

இந்த வருடத்திற்கான சர்வதேச நீர் மாநாடு 2023 டிசம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நீர் மற்றும் சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மையத்தில் (ஊநுறுயுளு) நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு தொடர்பாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… நீடித்து … Read more

மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல்அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்.

மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுடன், சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கினார். கொழும்பு, … Read more

நாட்டை முன்னேற்றும் புதிய பொருளாதார திட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பம்

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை கடந்த சில வருடங்களில் முகங்கொடுத்த கஷ்டமான அனுபவங்கள் அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்லப்பட மாட்டாது – ஜனாதிபதி வலியுறுத்தல் அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் : கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் இணக்கம்… – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் நாடு பெற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகது;துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் … Read more

அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) தொடர்பாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஒரு செய்தி

அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) வில்லைகளை வைத்தியரின் அனுமதியின்றி அதிகமாகப் பயன்படுத்துவதனால், அவற்றில் காணப்படும் பற்றீரியா நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படும் தன்மை வேகமாகக் குறைந்து வருவது உங்களுக்குத் தெரியுமா? தவறான பாவனையினால் நோய்களை ஏற்படுத்தக் கூடிய பற்றீரியாவினால் தற்போது எம்மிடம் காணப்படும் பிரபலமான நுண்ணுயிர் மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய தன்மை துரிதமாக அதிகரித்து வருகிறது. இதனால் வருடாந்தம் பல மில்லியன் எண்ணிக்கையிலான மனித உயிர்கள் உலகை விட்டுப் பிரிகின்றன. எமது எதிர்கால சந்ததியினரின் ஆயுள் பாதுகாப்பிற்காக நுண்ணுயிர் எதிர்ப்பி … Read more

நாட்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் கருணைக் கிழங்கு, வற்றாளை மற்றும் மரவள்ளி ஆகிய கிழங்கு வகைகள் ஏற்றுமதி

2020, 2021, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் எதோ ஒரு விதத்தில் கருணைக் கிழங்கு, வற்றாளை மற்றும் மரவள்ளி ஆகிய கிழங்கு வகைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை என விவசாயத் திணைக்களத்தின் சமூகப் பொருளாதார மற்றும் திட்டமிடல் மத்திய நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 295 மில்லியன் டொலர் செலவில் நாட்டிற்கு காய்கறிகள் மற்றும் பழவகைகள் விசேடமாக கருணைக் கிழங்கு, மரவள்ளி மற்றும் வற்றாளை ஆகிய கிழங்குகளை ஏற்றுமதி செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட … Read more

சபரிமலை யாத்திரர்களுக்கு நாளொன்றிற்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொடுக்க, நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பெருந்தோட் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் நிர்வாக குழுவினருக்கும், அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்; நேற்று (05.12.2023) அமைச்சில நடைபெற்றுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 100 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றது, அதன் செல்லுபடிகாலம் ஒரு மாதமாக உள்ளது. எனவே, விசாக்களையும், கால எல்லையையும் … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்தத ‘ஆஐஊர்யுருNபு’ (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்துள்ளதுடன், இத் தொகுதி படிப்படியாக வலுவிழந்து கொண்டிருக்கின்றது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை … Read more