ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  டுபாயில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாடான COP28இற்கு இணையாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு  (02) நடைபெற்றது. இலங்கையின் பசுமை பொருளாதார மாற்றம் மற்றும் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA உடனான பிரான்ஸின் தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. அதேநேரம் இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஒன்றுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் … Read more

காலநிலை நீதிமன்றம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு

  காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு COP28 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பாராட்டு. காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு நீதியும் நியாயமானதுமான உணர்வுகளுடன் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க COP28 மாநாட்டில் “காலநிலை நீதி மன்றத்தை”   (02) முன்மொழிந்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இங்கர் அண்டர்சன் (Inger Andersen) மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சர் வைத்தியர். அசெங் ஜேன் ரூத் (Dr. Aceng … Read more

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு

  டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு   (02) நடைபெற்றது. இச் சந்திப்பின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க, வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் பாதிக்ககூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா … Read more

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனையிட்டதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்தது

  மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனையிட்டதில் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்திருப்பதாகத் தெரியவந்தது மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு … Read more

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்து, உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலைமைப்பரிசில்

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, … Read more

2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துக் கொள்வனவில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

  2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சின் … Read more

இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம்

  கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மை தாங்கிய கோபால் பாக்லே அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் ,மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் உள்ளிட்ட வைத்திய குழுவினருடன் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து … Read more

இந்திய உயர்ஸ்தானிகர் நெடுந்தீவிக்கான விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நெடுந்தீவிக்கான விஜயத்தினை நேற்றையதினம் (30) மேற்கொண்டிருந்தார்.   இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உயர்ஸ்தானிகருக்கான வரவேற்பளிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான உலர் உணவுப் பொருட்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச கடற்போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினையும் குடிநீர் தேவையை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்று தருமாறு நெடுந்திய பிரதேச செயலாளர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்களால் கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது. மேலும் நெடுந்தீவு மேற்கு பகுதியில் … Read more

கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய, … Read more