பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 46% இனால் குறைப்பு – பொறுப்புகளின் நோக்கெல்லையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் உட்பட 21 செலவுத் தலைப்புகளுக்கான 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர், தனது அலுவலகத்தின் செலவு முகாமைத்துவம் குறித்த விபரங்களை ஹன்சார்ட் அறிக்கைக்கு சமர்ப்பித்தார். அதன்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் 21% வீதத்தினாலும், 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமாகும் போது 46% வீதத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் 1661.7 மில்லியன் ரூபாவாக இருந்த செலவுகள், 2022ஆம் ஆண்டில் 1310.4 மில்லியனாகவும், … Read more

2024ம் ஆண்டை உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதி செயற்படுவோம்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2023.11.29 அன்று மஹரகம பிரதேச செயலகத்தில் குழுவின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு உற்பத்தி விளைச்சலை அதிகரிக்கும் ஆண்டாகக் கருதப்படுவதால், அது தொடர்பான திட்டங்களைச் செயற்படுத்துமாறு கமநலச் சேவைகள் உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார். குறிப்பாக உணவுப் பயிர்கள் மற்றும் ஏற்றுமதி பயிர்கள் மீது அதிக கவனம் செலுத்துவது குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார். சட்டவிரோதமாக வயற்காணிகளை நிரப்புதல் தொடர்பான … Read more

உலக எய்ட்ஸ் தின அணிவகுப்பு…

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 01) காலை 09.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து எயிட்ஸ் தின நடைபவனி இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அணிவகுப்பு நாளை காலை 08.00 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்தில் இருந்து ஆரம்பமாகி பொதுமக்களுக்கு அறிவித்து புஞ்சி பொரளை, மருதானை வழியாக ஹைட்பார்க் மைதானத்திற்கு திரும்ப உள்ளது. உலக எயிட்ஸ் தின அணிவகுப்பில் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படையினர், சிறைச்சாலை அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையை … Read more

COP 28 மாநாட்டிற்கு ஜனாதிபதியிடமிருந்து 03 விசேட முன்மொழிவுகள் – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி

இம்முறை மாநாட்டில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மூவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் பங்கேற்பு. அரசாங்க செலவின்றி இளம் பிரதிநிதிகள், வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர் குழு கலந்து கொள்கிறது. அச்சுறுத்தலுக்குள்ளாகும் சாத்தியமுள்ள மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான “காலநிலை நீதிக்கான மன்றத்தை” நடைமுறைப்படுத்துதல் உட்பட மூன்று முன்மொழிவுகளை ஜக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் … Read more

கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உயர்மட்ட விளைவுகளைப் பெற்றுக்கொள்ள அரச அதிகாரிகளுக்கு மட்டக்களப்பில் பயிற்சி

பெறுகை நடைமுறையினை சீராக நடைமுறைப்படுத்துவதனூடாக கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உயர்மட்ட விளைவுகளை பெற்றுக் கொள்ள அரச அதிகாரிகளுக்கு வழிகாட்டும் இருநாள் செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டலில் தேசிய பெறுகை நடைமுறையினை அரச அபிவிருத்தி மற்றும் அமுலாக்கத்தி திட்டங்களின்போது வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எம். பஸீர் தலைமையில் இம்மாதம் 28,29 ஆந் திகதிகளில் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் … Read more

சாதனைப் பெண் திருமதி.அகிலத்திருநாயகி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் பாராட்டி கௌரவிப்பு.

சாதனைப் பெண் திருமதி.அகிலத்திருநாயகி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் பாராட்டி கௌரவிப்பு. பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 02 தங்கப் பதக்கங்களையும், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமையை பாராட்டி (29.11.2023) யாழ் மாவட்ட அரசாங்க … Read more

மட்டக்களப்பில் 3.5 கோடி செலவில் இரண்டு வீதிகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பில் இரண்டு வீதிகள் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3.5 கோடி ரூபாய் செலவில் புரைமைப்புச் செய்யப்படும் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் வீதி மற்றும் கொம்மாதுறை 10ம் கட்டை வீதி என்பனவே உடனடியாக புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் தொடர்ச்சியாக … Read more

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (29) மதியம் மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட … Read more

பதில் பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக தனது கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில்; பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பல நாட்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளார்.

தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதியில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர

தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் திருப்பி ஏற்றுமதி செய்யப்படும் எனவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உரிய ஆய்வுகளின் பின்னர், அவை தரதற்றவை என்று தெரியுமிடத்து மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இறக்குமதி … Read more