கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கம் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட கொழும்பை அண்மித்து காணப்படும் கல்விசார் பெறுமதிமிக்க இடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கத்தின் மாணவர்கள் மற்றும் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பேர் ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி செயலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்ததோடு, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுமுகமான சந்திப்பிலும் ஈடுபட்டனர். இதன்போது ஜனாதிபதி, இலங்கையின் அரசியல் வரலாறு மற்றும் … Read more

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து திறைசேரிக்கு 07 பில்லியன் ரூபா

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை நேற்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு, அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதியே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. … Read more

“கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்திற்கு 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு –  இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் “கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்” கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார். சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் … Read more

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கிவரும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும்

தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கிவரும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும் – வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்பு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி பந்துல … Read more

பாரம்பரிய முறைகளைத் தவிர்த்து, புதிய சிந்தனையுடன் செயல்பட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும்

இலங்கை ஹோட்டல் சங்கத்தின் 58 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய வேண்டும் எனவும், பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி புதிய சிந்தனையுடன் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எதிர்வரும் வருடங்களில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 7.5 மில்லியனாக அதிகரிப்பதற்கு சுற்றுலாத் துறையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் … Read more

சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும் நாடு எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை

எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள பொறுமையாக முன்னோக்கிச் செல்வது அவசியமாகும் – 2023 சனச தேசிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். அரசியல் கொள்கைகளுக்கு மாறாக அரசியலமைப்பின் 06 அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதற்கான அடிப்படை நியதிளுக்கு அமைவாகவே அரசாங்கம் … Read more

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்.. பரீட்சை பரீட்சை பெறுபேறுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட திகதியில் பரீட்சைகள் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட திகதியில் … Read more

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கு இணையவழி (online) ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேன்முறையீடுகளுக்கு 2023.11.07 ஆம் திகதி முதல் 2023.12.04 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி, பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் School Login உள்நுழைந்து மேன்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.  

இதுவரை நடைபெற்ற COP – 28 மாநாட்டு இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

இதுவரை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டில் (COP) எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் பிரதான நோக்கத்துடன் இந்த வருடம் டுபாயில் நடைபெறும் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும்போதும் சூழல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முறையான மற்றும் திட்டமிடப்பட்ட அறிவியல்பூர்வ அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இடம்பெறும் … Read more