முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான குழுக் கலந்துரையாடல் நேற்று (20) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்.திரு.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்த மிக அழகான பிரதேசமாக முல்லைத்தீவு மாவட்டம் சிறந்து விளங்குகின்ற போதும் சுற்றுலா துறை சார்ந்த விடையங்களில் பின்தங்கி காணப்படுவதனால் உல்லாச பிரயாணிகளை அதிகம் வரவழைப்பதற்காக சிறந்த சுற்றுலா மையங்களினை தெரிவு செய்து அவற்றை எவ்வாறான முறையில் அபிவிருத்தி செய்யமுடியும் என்பது … Read more

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திரத்தின் தீவு நாடுகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தல்

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு … Read more

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டி நாட்டின் உற்பத்தி செயல்முறைக்குப் பயன்படுத்த விரிவான திட்டம்

மாற்றுத்திறனாளி சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல். மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமூக வலுவூட்டல் … Read more

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு

இலங்கை படிப்படியாக பொருளாதார ரீதியில் வலுவடைந்து வருவதையிட்டு பங்களாதேஷ் பிரதமர் மகிழ்ச்சி தெரிவிப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (19) நியூயோர்க்கில் இடம்பெற்றது. தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர். மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த பங்களாதேஷ் … Read more

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் சந்திப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவு. ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவரை சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த போது ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். சர்வதேச … Read more

சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்…

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றிற்கு விரைவில் தீர்வு வழங்ககூடிய பொறிமுறைகள் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு, மேற்படி மாகாணத்தில் நிலவும் நீர் பிரச்சினை சம்பந்தமாகவும், குடிநீரை எவ்வாறு தடையின்றி மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இதன்போது … Read more

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (19/09/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதியின்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் … Read more

சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

மக்களின் வறுமையை ஒழிக்கும் தேசிய பணிக்கு பங்களிப்பு வழங்கும் இலங்கை சதொச நிறுவனம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இன்று (20) முதல் 6 வகையான அத்தியாசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதற்கமைய, சோயா மீட் (மொத்த விலை) ஒரு கிலோ கிராம் 45 ரூபாவால் கறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 580 ரூபாவாகும். உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 290 ரூபாவாகும். நெத்தோலி ஒரு … Read more

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் கவனம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணையாக இன்று (20) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந்த வருட … Read more

“புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” வெளியுறவு அணுகுமுறை வெளியீடு

பெக்டம் சிந்தனைக் கொத்து நிறுவனத்தினால் “புதியதோர் இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வை” என்னும் பெயரிலான வெளியுறவு அணுகுமுறை வெளியிடும் நிகழ்வு நேற்று (19) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நடைபெற்றது. இதன்போது, நூலின் எழுத்தாளரான உதித தேவப்பிரியவினால் நூலின் பிரதி, தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பெக்டம் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஆலோசகருமான கலாநிதி ரங்க கலன்சூரிய, நாட்டின் ஒன்பது மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் நடத்தப்பட்ட ஆலோசனை … Read more