பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

• ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நியமிப்பதற்கான கால அட்டவணையைத் தயாரிக்கும் வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மதிப்பீட்டில் தாமதம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் (07) பாராளுமன்றத்தில் முதல் தடவையாகக் கூடியது. பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இதில் விவாதிக்கப்பட்டதுடன், சூதாட்ட நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஆணைக்குழுவை நிறுவவதற்கான கால அட்டவணையை உருவாக்கும்வரை குறித்த சட்டமூலத்தை மதிப்பீடு செய்வது … Read more

நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான தேசிய முன்மொழிவொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார். இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் … Read more

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவி ஏற்பு

விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (6) தனது புதிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார். மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சுப நேரத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு, அவர் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தற்போது இலங்கை இராணுவத்தின் பொதுப்பணி … Read more

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை தாபிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, … Read more

நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரதமர் கலந்துரையாடல்..

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யொகயாமா மற்றும் இலங்கைக்கான புதிய பணிப்பாளர் தகஃபுமி கடோனோ ஆகியோர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை (08)கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தனர். புதிய பணிப்பாளர் நாயகத்தை வரவேற்ற பிரதமர், கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக தனது பதவிக்காலத்தை முடித்துச் செல்லும் பணிப்பாளர் நாயகம் திரு சென் சென் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத … Read more

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜூன் 06 ஆம் திகதி பகல் வேளையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் இன்றி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு பேர் (07), ஒரு டிங்கி (01), சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

நெடுந்தீவு படகுத்துரை நுழைவாயில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 38 பேர் கடற்படையினரால் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிக்கு அருகில் விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த முப்பத்தெட்டு (38) பேர் மற்றும் அங்கு கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் இலங்கை கடற்படையினர் கடந்த 7ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வெற்றிகரமாக மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உள்ள குறிகட்டுவான் படகுத் துரையில் இருந்து முப்பத்தெட்டு (38) பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகொன்று நெடுந்தீவு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கடற்பரப்பில் (Low Tide) விபத்துக்குள்ளானது. குறித்த காரணத்தினால் கப்பலுக்குள் தண்ணீர் … Read more

இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு கொழும்பில் வெற்றிகரமாக நிறைவு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரால் இணைந்து தலைமை தாங்கப்பட்ட இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு 2023 ஜூன் 07ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவுற்றது. அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக 2023 ஜூன் 06ஆந் திகதி நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சின் … Read more

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” எனும் நூலின் மூன்றாவது பதிப்பு ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017 இல் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் தீக்‌ஷன அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் … Read more

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் பங்களிப்புச் செய்ய வேண்டும்

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (06.06.2023) அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இந்த நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செய்து வரும் உதவிகளையும் … Read more