விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு

இம்முறை பெரும்போகத்தில், விவசாயிகள் பயிரிட்ட சோளம், விவசாயிகளிடம் கையிருப்பில் இருப்பதனால், அவற்றை உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சோளத்தின் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில விவசாயிகள் அவற்றை களங்சியப்படுத்தி வைத்திருந்தாலும், சோளம் இறக்குமதி செய்தால் அதன் விலை குறைவடையலாம். எனவே, தற்போது சோளத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதால், விவசாயிகள் தமது கையிருப்பில் உள்ள … Read more

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது.    

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பதவிப் … Read more

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த ஐந்தாண்டு பதவிக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக்கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்மலானையில் போக்குவரத்து பல்கலைக்கழகம்

ரஷ்யா மற்றும் பெலாரிஸ் அரசின் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன அந்த நாடுகளில் போக்குவரத்துத் துறைக்காக பட்டம் வழங்குவதற்காக இப்பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவ்விரண்டு நாடுகளிலும் காணப்படும் போக்குவரத்து பல்கலைக்கழகங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாணவர்கள் போக்குவரத்து விடயம் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்வதாக பல்கலைக்கழக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். இதற்கமைய ரஷ்ய போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் RUT (MIIT) உபவேந்தர் பேராசிரியர் அலெக்சாண்டர் கிளிமொச் உட்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – பிரதமர்

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; மலைநாட்டு கிராம அபிவிருத்தி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டதற்கிணங்க ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பின் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட பொதுமக்களுக்காக ஏதேனும் நிவாரணமொன்றை … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி நாளை (05) டனடின் நகரில் நடைபெறவுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் (02) சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு IMF ஒப்பந்தத்தில் முக்கிய விடயங்கள் சட்டமாக்கப்படும்

18 ஆவது தடவையாக சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கு தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை- ஜனாதிபதி தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டமூலம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஆகிய மூன்று வரைவுகளும் ஜூன் … Read more

கடற்பரப்புகளில் வானிலை, கடல்நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் … Read more