அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் – பிரதமர்

அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்திற்காக மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; மலைநாட்டு கிராம அபிவிருத்தி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டதற்கிணங்க ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்பின் காரணமாக அநீதி இழைக்கப்பட்ட பொதுமக்களுக்காக ஏதேனும் நிவாரணமொன்றை வழங்குவதற்காகத் திட்டமிடுவதாக பிரதமர் தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக தேரர்கள் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிப்பதாகவும் தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற வகையில் இது குறித்து தெரிந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

காணி இழப்பு உட்பட மலைநாட்டு மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு இதனை தான் கொண்டு வரவிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மீள்பயங்கரவாத சட்டத்தை பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்காக அது தொடர்பாக கவனம் செலுத்தும் போது அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் கூறிய பிரதமர் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.