தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பாக வாழ்வு மிகவும் அவசியம்

தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பான வாழ்வு மிகவும் அவசியம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு … Read more

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் – ஜனாதிபதி

ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – “IMF மற்றும் அதற்கு அப்பால்”கலந்துரையாடலில், பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான … Read more

தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்- கடற்தொழில் அமைச்சர்

யாழ். வடமராட்சியில் இருந்து தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது செய்யக்கூடியதான சாத்தியக்கூறு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் (29) மாலை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தீவுப் பகுதியில் … Read more

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம்

ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – “IMF மற்றும் அதற்கு அப்பால்”கலந்துரையாடலில், பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் … Read more

பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலைகளில் ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடல் மூலம் ஆங்கில மொழி அறிவினை மேம்படுத்தும் … Read more

தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட எதிர்பார்ப்பு

2030 ஆம் ஆண்டளவில், தென்னை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் மூலம் வருடாந்தம் ஒரு பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் 51ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்னைச் செய்கையின் புதிய நடைமுறைகள் குறித்து விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு விவசாய சேவைகள் பயிற்சி நிலையத்தில் இன்று (30) நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நாளை…..

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை (31) நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. எனினும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையில் நாளை (31) காலை 6.30 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி … Read more

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிலிப் குணவர்தன நினைவுதின நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை … Read more

'பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் மேம்பாடு' திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

‘பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி’ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (துஐஊயு) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் … Read more

பஸ் கட்டணங்கள் 12.9ம% ஆல் குறைப்பு

எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பயனை 24 மணித்தியாலங்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பொருட்களின் விலை … Read more