2048 ஆம் ஆண்டாகும் போது நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்ப அறிவை நம் நாட்டு மாணவர் சந்ததி பெற வேண்டும் – ஜனாதிபதி
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நான்கு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர், அதே பழைய முறையைப் பின்பற்றுவதா அல்லது புதிய முறையின் ஊடாக முன்னேறி வரும் உலகத்துடன் முன்னோக்கிச் செல்வதா என்பதை தீர்மானிக்க … Read more