இன்று நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணையின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

இதேவேளை, ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகவும், சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 465 ரூபாவாகவும் மறுசீரமைக்கப்படவுள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.