LPL போட்டியின் நான்காம் தொடர் ஜூலை 31ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 போட்டியின் நான்காவது தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கெடுக்கும் LPL தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிடப்பட்ட நிலையில், நான்காவது தொடர் போட்டிகள் ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 22 ஆம் … Read more

பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார். இலங்கையின் பிரபல இசை மேதையான அவர், நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றினார். இறக்கும் போது அவருக்கு வயது 81.

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவியொன்றை, வவுசராக அல்லது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணமாக வைப்புச் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துர்ள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசித்ததாகவும், அதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும் நோக்குடன், இந்த நிதியுதவியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதிக்கு முன்பாக நடைபெறவுள்ள … Read more

குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம், கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் (26) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது. திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை … Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைக்க அரசாங்கம் தயாரில்லை – சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் கோர … Read more

பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குற்பட்ட கிரிக்கெட் அணி அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்கேற்கும் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை நேற்று (26) அபுதாபியின் டோலேரன்ஸ் ஓவல் மைதானத்தில் வைத்து எதிர் கொண்டது. இப் போட்டியில் … Read more

கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்ப 500 புதிய பஸ்கள்

கிராமிய வீதிகளில் பொதுப் போக்குவரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள டிப்போக்களுக்கு பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த பேருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த … Read more

விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் திட்டமிடல்களை வகுப்பதற்காக நிபுணர் குழு ஜனாதிபதி பணிப்புரை

அனைத்து விளையாட்டுத் துறைகளும் உள்ளடங்கும் வகையில் திறமையான 100 வீர வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை. தியகம மஹிந்த ராஜபக்‌ஷ விளையாட்டுத் தொகுதியை விளையாட்டுத்துறைக்கான பல்கலைக்கழகமாக அபிவிருத்திச் செய்வது குறித்து ஜனாதிபதியின் அவதானம்.பேஸ் போல் விளையாட்டினை 100 பாடசாலைகளில் பிரபல்யப்படுத்த திட்டம்.இந்நாட்டு விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை … Read more

இலங்கை – நியூசிலாந்து அணிகள் மோதும் 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை (28) நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்தின் ஒக்லாந்து நகரின் ஈடன் பார்க் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 … Read more

அரசாங்கத்தின் 25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் – ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூகத்தினருக்கு அழைப்பு. இலங்கை எந்நேரத்திலும் அரசியல் ஸ்திரத் தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் அதேநேரம் மிகப்பெரிய பொருளாதார குழுவொன்றுடன் முன்னோக்கி பயணிக்க எதிர்பார்க்கிறது.இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் … Read more