கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய இலத்திரணியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான சர்வதேச விலைமணு கோரலூடாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கடவுச் சீட்டுக்களை தயாரிப்பதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பைக் கருத்தில் கொண்டு, இலத்திரனியல் … Read more