தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பதிவு செய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட பொதிகளை இன்று (26) முதல் தபால் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதி தபால் மா அதிபர்கள், பிரதம கணக்காளர்கள், பிராந்திய தபால் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தபால் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று வடகடலில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2024 ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம், பேதுருதுடுவைக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பதினொரு (11) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2024 ஆகஸ்ட் … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 776 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் எழுநூற்று எழுபத்தாறு (776) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கல்பிட்டி கப்பலடி கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர் தீவு முழுவதும் கரையோரங்கள் மற்றும் கரையோரங்களை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, … Read more

அதிகளவில் வரி நிலுவை உள்ளதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை!

• உள்நாட்டு இறைவரி, சுங்கம், மதுவரி ஆகிய மூன்று திணைக்களங்களிலும் 90 பில்லியன் ரூபாய்க்கும் குறைவாகவே வரி நிலுவை உள்ளது. • 2023 இல் 3 டிரில்லியன் ரூபாய் சாதனைமிகு வருமானம்- மதுவரி ஆணையாளர் நாயகம். • நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் வரி வருமானம் சேகரிக்கும் இலக்குகளை மிஞ்சி செல்ல முடிந்தது- உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (வரிக் கொள்கை, சர்வதேச விவகாரங்கள் மற்றும் சட்டங்கள்). • ஊழியர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் வரி … Read more

தேர்தல் முறைப்பாடுகளின் சாரம்சம்.

  2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.26 பி.ப 04.30 வரை) தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 127 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.26 ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1052 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபை வைப்புப் பணம் கையேற்றல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2024 : எல்பிட்டிய பிரதேச சபையி வைப்புப் பணம் கைறே;றல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு.

ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துடன் தற்போதைய நீர்க் கட்டணச் சூத்திரத்தின் பிரகாரம் இரசாயண திரவங்கள் உட்பட ஏனைய செலவினங்களைக் கருத்தில் கொண்டு நீர்க் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் … Read more

2024 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் – எல்பிட்டிய பிரதேச சபையின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல்

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2024க்கான தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி இன்று (26) வெளியிட்டுள்ளார்.

கடற்படையினரின் பங்களிப்புடன் மஹமோதர மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணி

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டமொன்று (2024 ஆகஸ்ட் 24) காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை நகர எல்லையுடன் இணைந்த கடற்கரையை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி, தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின மற்றும் காவந்திஸ்ஸ நிறுவனங்களின் கடற்டையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தின் மூலம், காலி மஹமோதர முதல் தடெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை … Read more

இலங்கையில் சூரிய சக்தி மற்றும் விவசாயத் திட்டங்களில் கொரிய முதலீடுகள்….

தென்கொரிய மக்கள் குடியரசின் முன்னணி தொழில்முயற்சியாளர்களில் ஒருவரான யோங்-ஜோ மூன் அவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் எரிசக்தி மற்றும் விவசாயத் துறையில் முதலீடு செய்வதில் விருப்பம் தெரிவித்த திரு. யோங்-ஜோ முன், அவர் தலைமை வகிக்கும் சர்வதேச பரிவர்த்தனை அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்த தொழில்முயற்சியாளர்கள், இலங்கையில் பல சூரிய சக்தி திட்டங்களிலும், பழச் செய்கைகளிலும் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.. இலங்கையில் பழச் செய்கையில் … Read more