நாட்டின் சில பிரதேசங்களுக்கு பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, … Read more

இந்த வருடத்தில் வருமான வரியில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது 

எவ்விதத்திலும் இந்த வருடத்தில் வருமான வரியின் அளவை குறைக்க அல்லது மாற்ற முடியாது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்று போது இவ்வாறு குறிப்பிட்டார். தனிநபர் வருமான வரி விரைவில் குறைக்கப்பட உள்ளதாக கடந்த நாட்களில் எமக்கு அறிய முடிந்தது. குறிப்பிட்ட ஒரு தொகையில் இந்த வரி குறைக்க … Read more

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள்

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால்  இன்று (24) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

3 வது சதத்தை பெற்ற கமிந்து மெண்டிஸ்!

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாள் இன்றாகும். மென்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் கமிந்து மெண்டிஸ் தனது 3 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றார். மேலும் இப்போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி சற்று முன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் … Read more

புதுப்பிக்கப்படாத சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அது தொர்பில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை

• புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை புதுப்பிப்பதற்காக புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும். • 2025 முதல் ஆறு மாதங்களில் இ-சாரதி அனுமதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க. புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் … Read more

வானிலை முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 23ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் … Read more

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைத் திருத்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தை ஸ்தாபிக்கும் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்ளக ரீதியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஆரம்ப சேவை உத்தியோகத்தர்களாக வழங்கப்பட்டுள்ள நியமனத்தைத் திருத்துவதற்காக மீண்டும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு நிதி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அதன்படி இந்த யோசனையை அமைச்சரவை அனுமதி;க்கு சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 3,027பேருக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நீண்டகாலமாக தாம் எதிர்கொண்ட இப்பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பாக சமுர்த்தி … Read more

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் மக்களிடம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய

அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குமூலம் அன்றி தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டும் செயற்படுத்தப்படாத வேலைத்திட்டங்கள் மக்களுக்கு முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். அதன்படி மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மக்கள் எவ்விதத்திலும் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் எப்போதும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு செயற்படுவதுடன், அது கிடைக்கப்பெறும் வரி வருமானம் மீண்டும் மக்கள் சேவைக்கே பயன்படுத்தப்படுவதாகவும், மக்களுக்குக் கிடைத்துள்ள நிவாரணத்தின் படி அது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்க … Read more

விகிதாசார தேர்தல் முறையில் பணத்தின் பங்கு – தேர்தல் ஆணையாளர் நாயகம்

1946 ஆம் ஆண்டு முதல் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அமுலில் உள்ளதாகவும், அரச ஆணையின் 70 ஆவது பிரிவின்படி ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளைக் காட்டும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை தேர்தல் முடிந்த 31 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் தேர்தல் பிரசார செலவுகள் குறித்து விழிப்புணர்வு … Read more

தலதா அதுகோரல  இராஜினாமா செய்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் :  தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

இரத்தினபுரி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல அவர்கள் 2024 ஓகஸ்ட் 21ஆம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.