குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் வழமைபோன்று

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று (04) வழமைபோன்று இடம்பெறுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப் காரணமாக, இன்றைய தினம் அத்தியாவசிய சேவை மற்றும், ஏனைய சேவைகளுக்காக விஜயம் செய்வதை தவிர்த்து கொள்ளுமாறு நேற்று (03) பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திணைக்களத்தின் ஒரு நாள் சேவையில் தாமதம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது . இருப்பினும் தற்பொழுது இந்த திடீர் செயலிழப்பு சரிசெய்யப்பட்டு வழமையான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் … Read more

ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்த பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது

ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அரசாங்க தரப்பில் இருந்து தனி குழுவாக செயற்படும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற பேச்சு வார்தைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை, எந்தவித அர்த்தமும் அற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சாகர் கோட்பாட்டால் தொடர்ந்து வழிநடத்தப்படும் இந்தியா

இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்கள் உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் சுகாதாரத்துறை அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது. இம்மருத்துவப்பொருட்கள் அடங்கிய தொகுதி இந்தியக் கடற்படைக் கப்பல் கரியால் மூலமாக கொண்டுவரப்பட்டதுடன் பேராதனை போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன. இப்பொருட்களை துரிதமாக இலங்கைக்கு விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டமையானது இலங்கைக்கும் அந்நாட்டு மக்களின் … Read more

இலங்கையின் பரந்தளவான தேவைகளை தொடர்ச்சியாக நிறைவேற்றிவரும் இந்திய உதவிகள்

2022ஆம் ஆண்டில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான பொருளாதார உதவியானது இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் பரந்தளவிலான தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் வலுவான ஆதாரமாக காணப்படுகின்றது. 2.  உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுடன், அத்திட்டத்தின் கீழ் புதுவருடத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட 16000 மெட்ரிக்தொன் அரிசி நாடளாவிய ரீதியில் உள்ள சதோச … Read more

இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி

இலங்கை கொண்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில், தற்பொழுது பயன்படுத்தக்கூடிய தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்திருப்பதாக நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் தலைமையிலான அதிகாரிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் தொடர்பாக நிதி அமைச்சர் இன்று (04) பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் பொழுதே இந்த விடயத்தை குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பான நிகழ்ச்சி நிரலை தொடர்வதற்கு மேலும் சுமார் 6 மாத … Read more

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டி அட்டவணை

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் கலந்துக்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில், பேட் … Read more

பிரதி சபாநாயகரின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டியவின் இராஜனாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (04) காலை பாராளுமன்றத்தில்  ,இதனை அறிவித்தார். இதற்கமைவாக பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்யும் நடவடிக்கை நாளை (05) இடம்பெறும் என்று சபாநாயகர்  அறிவித்தார். 

மட்டக்களப்பில் 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு 138 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 200 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக விசேட கலந்துரையாடல் நேற்று (03) கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டுமான வசதிகள் இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இத்திட்டத்திற்கான அனுமதி, இட ஒதுக்கீடு போன்ற பல முக்கிய விடயங்கள் … Read more