ஜனாதிபதி தேர்தல் – 2024 அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல்மூல வாக்கு விண்ணப்பங்களின் விபரம்
அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல்மூல வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல்மூல வாக்கு விண்ணப்பங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்;, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (2024.08.22 பி;.ப 04.30 வரை) தேர்தல் தொடர்பாக 65 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, 2024.07.31ஆம் திகதி தொடக்கம் 2024.08.22ஆம் திகதி வரையிலும் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 836 என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி ஊடாக ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதற்கான “pravesha” இணையத்தின் அறிமுகம் நேற்று (22) காலை தாமரை கோபுர வளாகத்தில், பிரதமர் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில், போக்குவரத்தது மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இன்று (23) முதல் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுக்களை இணையவழி ஊடாக கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரயிலில் பயணிக்கும் இரண்டு ரயில் … Read more
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நேற்று (ஆகஸ்ட் 22) நடந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழுவின் (NDMCC) 67வது கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் “தேசிய அனர்த்த தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மூலோபாயத்தில் NDMCC ஒரு மூலக்கல்லாக நிற்கிறது. அதன் கலந்துரையாடல்களும் முடிவுகளும் மனித உயிர்களைக்காக்க, வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க மற்றும் நமது கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் … Read more
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தூதுக் குழு கடந்த 2024.08.11 முதல் 2024.08.14 ஆம் திகதி வரை மாலைதீவு குடியரசிற்கு விஜயம் செய்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் (பாராளுமன்றத்தின்) சபாநாயகர் கௌரவ அப்துல் ரஹீம் அப்துல்லா விடுத்த அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தின் போது ஆகஸ்ட் 13 ஆம் திகதி கௌரவ மஹிந்த … Read more
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Stockdale’ என்ற கப்பல் நேற்று (2024 ஆகஸ்ட் 22,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறாக, கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள Arleigh Burke – class destroyer வகையின் ‘USS Stockdale’ கப்பல் 155.3 மீட்டர் நீளம் கொண்டுள்ளதுடன் மொத்தம் முந்நூற்று முப்பத்திரண்டு (332) கடற்படையினர்களைக் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander … Read more
2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
• 2025 ஜனவரி முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவு நிலையாக ரூ.25,000 வழங்கப்படும். • அரச சேவையில் கனிஷ்ட ஊழியரின் சம்பளம் ரூ.55,000 • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.12,500 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு – சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச சேவையின் அடிப்படைச் சம்பளம் கனிஷ்ட தரத்தினருக்கு … Read more
‘செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் படிமுறையாக தெரிவுசெய்யப்பட்ட 100 பாடசாலைகளில் 6ஆம் தரம் 9ஆம் தரம் வரைக்கும் கல்விபயிலும் மாணவர்களின் பங்களிப்புடன் மே;றகொள்ளப்படவுள்ளது. எதிர்கால உலகலாவிய போக்குகளை உருவாக்கக்கூடிய பிரஜைகளை உருவாக்குவதும், பொருளாதார அபிவிருத்தியில் பயனுள்ள வகையில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதும் போன்ற நோக்கங்களை அடைவதற்கு இயலுமாகும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு … Read more
கட்டணமின்றி சுற்றுலா விசாக்களை வழங்குவது தொடர்பாக, ஏனைய நாடுகள் பின்பற்றும் முறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிபுணர் குழுவை நியமிப்பதற்கு … Read more