உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி
சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் தொடர்பான DNA பரிசோதனைக்கு, சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை, இவ்வாறு தோண்டியெடுக்க கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019 … Read more