பந்துலலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

  ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பந்துலலால் பண்டாரிகொட அவர்கள் இன்று (21) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.   ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய கௌரவ மனுஷ நாணயகார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து … Read more

பயிர் சேத இழப்பீட்டை ஒரு இலட்சமாக உயர்த்த அமைச்சரவை பத்திரம்

பயிர் சேத இழப்பீடாக தற்போது அரசாங்கத்தினால் இலவசமாக ஒரு ஏக்கருக்கு வழங்கப்படும் 40,000 ரூபாவை ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்குமாறு பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். விவசாயப் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (20) பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர வர்த்தக விவசாயிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் விவசாய அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வறட்சி, வெள்ளம் மற்றும் … Read more

வெள்ள நிலைமை குறித்து மேலும் அவதானமாக இருங்கள் – நீர்ப்பாசன திணைக்களம்

பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பிரிவின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி ஜி.எஸ். சகுரா தில்தாரா தெரிவிக்கிறார். அதனடிப்படையில் புலத்சிங்ஹல, மதுராவல,பாலிந்தநுவர மற்றும் மில்லனிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இந்த பிரதேசங்களில் இடிந்து விழுந்திருக்கும் வீதிகளை பயன்படுத்தும் மக்கள் இந்த நிலவரம் … Read more

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்த எதிர்வரும் வருடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்…

அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கட்டுப்பாட்டிற்காக எதிர்வரும் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டில் ஆரம்ப சுகாதார சேவைக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுகாதார அமைச்சர்: இலங்கை இன்று பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. இப்பிராந்தியத்தில் … Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப்டம்பர் 4ல் ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி ஆரம்பமாகின்றது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான திகதி தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் செப்டம்பர் 4ம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய தேர்தல் திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் 5ம், 6ம் … Read more

கிளிநொச்சியில் தமிழ்மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமைகள் தொடர்பான செயலமர்வு 

  ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.    இதற்கமைய கிளிநொச்சி  மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் தமிழ் மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் தொடர்பான விசேட செயலமர்வு நேற்று (20) நடைபெற்றது.    குறித்த விசேட செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், பதில் அரசாங்க அதிபருமான எஸ்.முரளிதரன்  தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.    இதன்போது … Read more

கண்டி எசல பெரஹர இறுதி வீதி ஊர்வலத்தில் இராணுவ தளபதி பங்கேற்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து கண்டி எசல பெரஹெரவின் இறுதி நாளான 2024 ஆகஸ்ட் 19 அன்று மாரந்தோலி ஊர்வலத்தைக் கண்டுகளித்தார். இந்த பாரம்பரிய ஊர்வலம் இலங்கையின் மிக முக்கியமான கலாசார நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வில் முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 21ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ … Read more

சுத்தமான மற்றும் நிலையான ஆற்றல் உற்பத்தியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்

எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் மற்றும் இந்தியா பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து. • சொபாதனவி மின் உற்பத்தி நிலையம் ஆகஸ்ட் 28ஆம் திகதி திறந்து வைக்கப்படும். • குறைந்த செலவில் தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். • புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்து ஒரு சந்தர்ப்பம் இது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. கெரவலப்பிட்டிய “சொபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி மின் … Read more

கண்டி எசல பெரஹெரா நிறைவுற்றதாக அறிவிக்கும் பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெராவை அடையாளப்படுத்த முழு ஆதரவு. வரலாற்று சிறப்பு மிக்க கண்டி தலதா மாளியை எசல பெரஹெரா சிறப்பாக நிறைவுள்ளதாக அறிவிக்கும் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் இன்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.   ஊர்வலாமாக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தலதா மாளிகை மற்றும் அண்மைய விகாரைகளின் தியவடன நிலமேக்களை ஜனாதிபதி வரவேற்றார்.   … Read more