'இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு வரும்'

தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் என்று இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சார் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்கள் விலைமதிப்பற்ற தியாகங்களை யாராலும் சிறுமைப்படுத்தவோ மறக்கவோ முடியாது” என்று இராணுவ தளபதி 'அபிமன்சல' போர் வீரர்களிடம் தெரிவிப்பு

ஜனநாயகத்தையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்தில் செய்த வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் உயிரையும், கால்களையும் பணயம் வைத்து எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதனையும் மறந்துவிடமுடியாது. பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா அவர்கள் ஏப்ரல் 13 பிற்பகல் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், கடுமையாக காயமடைந்த மற்றும் நிரந்தர அங்கவீனமுற்ற … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று இடம்பெற்ற கொரோனா ஒப்பிடும்போது இன்று (14) கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (14) காலை வெளியிட்டது. அதன்படிஇ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 88-ஐ விட குறைவாகும். இதனால்இ நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 … Read more

திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலை ,தாதி பயிற்சிப்பிரிவின் தாதி அதிகாரி புஸ்பா ரமனி டி சொய்சா தெரிவிக்கையில், பண்டிகைக்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் அனைவலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். வீதியில் செல்லும் போது வீதி ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவதன் மூலம் விபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும். மதுபாவனையினாலும் பாரிய அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.திடீர் விபத்துக்களில் 85 வீதமானவை … Read more

சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் 

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய  பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ விடுத்துள்ள தமிழ் சிங்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகங்கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் … Read more

சபாநாயகரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சபாநாயகரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இலங்கையர்களாகிய சிங்கள, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் தற்போது பிறந்திருப்பது வருடத்தின் மகிமையான பண்டிகையான சிங்கள-தமிழ் புத்தாண்டாகும். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேலான நீண்ட வரலாற்று காலத்தில் நாம் இந்த மாபெரும் கலாசார விழாவை எமது தேசிய பாரம்பரியமாகக் கருதி அதனை எதிர்கால சந்ததியினரும் உணர்ந்துகொள்ளும் வகையில் உயர்வாகக் கொண்டாடி வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் முகங்கொடுத்த சிக்கலான, சவால் மிக்க காலப் பகுதியிலும் இவ்வாறான நிகழ்வைக் கொண்டாட நாம் தவறவில்லை. எமது … Read more

வடக்கு,கிழக்கு ,வடமத்திய, ஊவா மாகாணங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கடற்பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 … Read more

அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர்

நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமரின் தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ்-சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக-கலாசார … Read more

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை, சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சதொச நிறுவன வலைப்பின்னல் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிசறை, இரத்மலானை ஆகிய பிரதான மத்திய நிலையங்களில் இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஷ்வ லொக்குகமகே தெரிவித்தார். இதற்கமைவாக ,சதொச விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். சகல சதொச விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் திறக்கப்படுமென்றும் அவர் கூறினார்.