எரிபொருள் தொடர்பில் நேற்று 68 சுற்றிவளைப்பு

சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்தமை, களஞ்சியப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் நேற்றைய (13) தினம் 63 சுற்றிவளைப்புக்களை பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். இதன்போது, ஐயாயிரத்து 690 லீற்றர் பெற்றோலும், ஐயாயிரத்து 620 லீற்றர் மண்ணெண்ணெயும், பத்தாயிரத்து 115 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக எரிபொருள் சேகரித்தல் மற்றும் களஞ்சியப்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  

இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவை

தமிழ் மற்றும் சிங்கள  புதுவருட பண்டிகைக்கு அமைவாக, இன்றும், நாளையும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்னஹங்ச தெரிவித்துள்ளார். இந்த பஸ்களுக்கு தேவையான எரிபொருள் சபையிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தொடக்கம் 24 மணித்தியாலமும் விசேட பஸ்கள் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன.  

விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்க அறிவுறுத்தல்

புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி டி சொய்ஸா தெரிவித்துள்ளார். வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், விபத்துகள் ஏற்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, பண்டிகைக் காலத்தில் சுற்றுலாவை மேற்கொள்வோர் நீர்நிலைகளில் நீராடுவது குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம், மதுபோதையுடன் வாகனம் செலுத்துவதையும் தவிர்க்குமாறும் … Read more

மைலடியில் ,முன்னாள் போராளிகளுக்காக தளபதியின் புதிய வீட்மைப்புத் திட்டம்

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இயன்றளவு வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடியைச் சேர்ந்த திரு ராசவல்லன் தபோரூபனின் ஏழ்மை நிலையை தளபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவருக்குப் புதிய வீட்டினை நிர்மானிக்கும் திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மற்றும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் … Read more

சுபகிருது வருடம் நாளை பிறக்கிறது

தமிழரது 60 வருட சக்கரத்தில் 36ஆவது ஆண்டான சுபகிருது வருடம் நாளை பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, நாளைக் காலை 7.50 இற்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம் காலை 8.41இற்கும் சுபகிருது வருஷம் பிறப்பதாக சோதிடர்கள் அறிவித்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், சிவப்பு அல்லது மஞ்சள் நிறப் பட்டாடையோ, சிவப்புக் கரை அமைந்த பட்டாடையோ அணிதல் சிறப்பு. மஞ்சள் நிறப் பட்டு அல்லது மஞ்சள் கரை கொண்ட வெள்ளை வஸ்திரத்தை அணிவது நல்லதென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது. … Read more

புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவிக்கையில், நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன, மூவரில் யுவதியொருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில் யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. காணாமற் போயுள்ள ஏனைய யுவதி மற்றும் இளைஞனின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு,  நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர் இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை … Read more

367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை நீடிக்கும் வர்த்தமானி

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதிக்கான வரையறையை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சரால், 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் வௌியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் https://cdn.newsfirst.lk/tamil-uploads/2022/04/43b1fe84-2274-42_t.pdf

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கடமைகளை பொறுப்பேற்றார்

இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார அவரது அமைச்சில் நேற்று (12) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ,தமது அமைச்சின் விடயதானத்திற்கு உட்பட்டவகையில் மோசடி அல்லது ஊழல்கள் இடம் பெறாதவகையில் பொறுப்புடன் செயல்படுவதாக தெரிவித்த அவர்,  கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறினார். சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல்இ நெல்இ தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், … Read more