தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள கோரிக்கை

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது சிறுவர்களை ஈடுபடுத்துவதை சிறுவர்களை ஈடுபடுத்துவதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்கள் காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிறுவர்களை இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனால், அவர்கள் காயங்கள் அல்லது உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1991 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாகதிருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடலில் … Read more

பெண்களின் சுகாதாரத்தேவைகளுக்கு ஆதரவளிக்கும் சினிது திட்டத்தை மேம்படுத்தும் இந்திய-இலங்கை மன்றம்

இலங்கையில், வசதிகுறைந்த பெண்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்திய இலங்கை மன்றத்தினால் ஆதரவளிக்கப்பட்டு, சினிது அமைப்பினால் அமுல்படுத்தப்படும் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்வதற்காக இந்திய இலங்கை மன்றம் (ISLF) 2022 ஏப்ரல் 05 ஆம் திகதி ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் இந்திய இலங்கை மன்றத்தின் இணைத்தலைவருமான மேன்மைதங்கிய திரு.கோபால் பாக்லே, இராஜதந்திரிகள், உலக வங்கி மற்றும் கொழும்பு திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சினிது அமைப்பின் இணைத்தலைவர்களான  … Read more

போதைப்பொருள் பாவனையினை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது இதனை தனி மனித முயற்சியினால் கட்டுப்படுத்த முடியாது அனைவரும் இணைந்தே கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மற்றும் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். … Read more

ஒஸ்லோ மற்றும் பாக்தாத்தில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள துணைத் தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்

அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்தை அடுத்து, நோர்வே இராச்சியத்தின் ஒஸ்லோ, ஈராக் குடியரசின் பாக்தாத் ஆகியவற்றில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியா பொதுநலவாயத்தின் சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியவற்றை 2022 ஏப்ரல் 30 முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு தூதரகங்கள் மற்றும் பணிமனைகளை தற்காலிகமாக மூடுவது தொடர்பான தீர்மானமானது, கவனமாக ஆலோசித்ததைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. இது தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடு எதிர்நோக்கும் … Read more

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகம்

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. நாட்டில் சேதன மற்றும் உயிரியல் உர உற்பத்தியில் தற்சமயம் கணிசமான வளர்ச்சியை காண முடிவதாக செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார். இம்முறை உற்பத்தி செய்யப்பட்ட திரவ உரத்தின் அளவு ஒரு கோடி 30 லட்சம் லீற்றர்களுக்கு அதிகமாகும்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய, முறையான ஒழுங்குறுத்தலுக்கு அமைய, ஒருசில உர வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேயிலை உற்பத்திக்கென 33 ஆயிரம் மெற்றிக் … Read more

அடுத்த சில நாட்களில் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் (08, 09 மற்றும் 10 ஆம் திகதி) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் … Read more

புத்தாண்டிற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு சம்பளம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால், புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.   தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களைப் போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் … Read more

இன்றைய (07.04.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.04.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் 06.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (07) முற்பகல் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். ‘கூடுதல் வரி சட்டமூலம்’ (Surcharge Tax Bill) இரண்டாம் வாசிப்பின் போது, ​​பாராளுமன்ற அவைக்கு பிரவேசித்த ஜனாதிபதி  அவர்களை, பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி அமோக வரவேற்பளித்தனர். சிறிது நேரம் சபையில் இருந்த ஜனாதிபதி அவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் உரைகளுக்கு தமது அவதானத்தைச் செலுத்தினார்.    ஜனாதிபதி … Read more