கடற்பரப்புகளில் வானிலை, கடல் நிலை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் … Read more

பொது போக்குவரத்து சேவைகள்

கடந்த சனிக்கிழமை (2) அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் ,தளர்த்தப்பட்டதையடுத்து ரயில்கள், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்கள் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன. அனைத்து அலுவலக ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபட்டன .எனினும் நீண்ட தூர இடங்களுக்கான ரயில்கள் ஒரு மணித்தியாலம் தாமதமாக செயற்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். அனைத்து பஸ் … Read more

பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய அலுவல்களை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்கு நான்கு அமைச்சர்கள் நியமனம்…

முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை  சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள்  இன்று, (04) முற்பகல் நியமித்துள்ளார். வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால்,  இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்கு பங்களிக்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் … Read more

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு…

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கு தீர்வு காணப்பட  வேண்டி உள்ளது. அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.  அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய … Read more

கௌரவ பிரதமர் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். கௌரவ பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் ஊடக பிரிவு

இந்திய உதவியின்கீழ் இலங்கைக்கு 40,000 மெட்ரிக்தொன் டீசல் கையளிப்பு

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல்  உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களிடம்  கொழும்பில் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும். கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் … Read more

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டமும் ,ஊடரங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளன

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டம் மற்றும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பேணவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் … Read more

தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க வேண்டும்

தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் ,நாளை முதல் எட்டாம் திகதி வரை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கத்தேவையில்லை. இதே போன்று இதுவரையில்  தவணை பரீட்சையை நிறைவு செய்த  மாணவர்களை அழைக்கத்தேவையில்லையென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி, தவணை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.