நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

நாளை முதல், மின்சாரம் துண்டிக்கப்படும்  நேரம் மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, நாளொன்றில் மின் துண்டிப்பு காலம் நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக மூடப்பட்டிருந்த கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும்  உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் … Read more

பொலிஸ் ஊடரடங்கு நீக்கம்

கொழும்பில் சில பகுதிகளில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ,கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு கல்கிசை மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் கம்பாஹ மாவட்டத்தில் களனி பொலிஸ பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் மா அதிபரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு ,இன்று 2022.04.01 அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு … Read more

பல்வேறு துறைகளுக்கு மேலும் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு…

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby),  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி … Read more

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார் . கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு 91 வயது. அவர் 1989 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் ,பல அமைச்சு பொறுப்புக்களை வகித்துள்ளார்.  இவர் 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்தார்.

இலங்கை மத்திய வங்கி பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய நாணய மாற்று அனுமதிப் பத்திரத்தினை இரத்துச் செய்கிறது

பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் … Read more

தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்து, கௌரவ பிரதமர் தலைமையிலான கலந்துரையாடல்

தற்போதைய பொருளதார பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் நீண்ட கால பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பொருளாதார மறுமலர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு பொருளாதாரத் துறையில் நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு அறிவார்ந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதன்போது கருத்து தெரிவித்த நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க அவர்கள், மார்ச் … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராகவுள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 15,000 ரூபாய் பெறுமதியான இப்புலமைப்பரிசிலைப் பொறுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திலும் மற்றும் பிராந்திய காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். மே மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி … Read more

யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண … Read more