இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பங்களிப்புடன் மட்டக்களப்பில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டம் 

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ,தும்பாலை பகுதியில் பசுமை தேசம் விவசாய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (29) இடம்பெற்றது. தேசிய கொடியேற்றியதனையடுத்து பயன்தரு மரங்கள் ,அதிதிகளினால் நடப்படதன் பின்னர் வீட்டுத்தோட்ட பயிர்களும் நடப்பட்டன. அதனையடுத்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச … Read more

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால், வெல்லாவெளியில் பாடசாலை திறப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுரவணயடியூற்று பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அதிதிகள் உரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கொழும்பில் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமை

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் 2022 மார்ச் 30ஆந் திகதி கொழும்பில் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 5வது வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டிற்கு மெய்நிகர் முறையில் தலைமை தாங்கினார். இந்த உச்சிமாநாட்டில் பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பூடான் பிரதமர் டாக்டர் லோடே ஷெரிங், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா (ஓய்வு பெற்றவர்) … Read more

புத்தாண்டை முன்னிட்டு மேலும் பல பஸ்களை சேவையில் ஈடுத்த திட்டம்

எதிர்வரும் தமிழ்இ சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு,இயன்றளவு மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் விசேட போக்குவரத்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பஸ் பயணத்தின்போது கொவிட் சட்ட விதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரயில் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நேற்று (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (29) இரவு போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். புகையிரத பயணச் சீட்டுக்களின் கட்டணத்தை தன்னிச்சையாக அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து ரயில் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை … Read more

'பசுமையான தேசம்' தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல்

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய, ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை – 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல் என்ற திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்றைய தினம் (29) யாழ் நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன. கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமை சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்கான ஜனாதிபதியின் … Read more

பிம்ஸ்டெக்கின் அமைச்சர்கள் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 18வது அமைச்சர் கூட்டம் 2022 மார்ச் 29ஆந் திகதி பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற அதே வேளை, மியன்மார் வெளியுறவு அமைச்சர் இணைய வழியில் பங்கேற்றார். கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய வெளிநாட்டு … Read more

உலக நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தையும், மக்களையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்- பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை மையமாகக்கொண்டு, இணைய வழியாக (Online)  இடம்பெற்ற “வங்காள விரிகுடா சார்ந்த பல்தரப்பு தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” (பிம்ஸ்டெக்) … Read more

பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்

முதல் மற்றும் இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இலங்கையில், சிறுவர்கள் தவிர, ஏனையவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் மாத்திரமே வழங்கப்படுகின்றது பொதுவாக சில நாடுகளுக்கு செல்வதாயின் பைஸர் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறான சந்தர்ப்பம் வெளிநாடு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தோனேசியாவில் புலமைப் பரிசில்கள்

இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் வெகுஜன ஊடகத்துறையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு இரு நாட்டு வெகுஜன ஊடக அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறை கற்கை நெறியை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தோனேசியாவில், சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அந் நாட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜோனி ஜி ப்லெட்டி உள்ளிட்ட ஊடகத்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை மூலம் ஊடகத்துறை … Read more