மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி

கோறளைப்பற்று மேற்குஇ ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உட்பட்ட மீராவோடை உதுமான் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை, உதுமான் வித்தியாலய முற்றலில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு தீர்ப்பாளர்களாக ஆர்.எம்.புகாரிஇ ஏ.எல்.யாசீன் ஆகியோர் கடமையாற்றியதோடுஇ அல்-ஹிதாயா மகா வித்தியாலய (தேசியப்பாடசாலை) மாணவர்கள் நடுவர்களாகக் கடமையாற்றினர்.  

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும்… சவூதி தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்தார். தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு இந்நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். ஹுசைன் அல் ஹார்தியின் பதவிக்காலத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் … Read more

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா வரவேற்கிறது

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களை மார்ச் 28ஆம் திகதி சந்தித்திருந்தார். 2.         மார்ச் 25ஆம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றிருந்த சந்திப்பு உள்ளிட்ட அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேராளர்களால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரங்கள், காணாமல்போனோர் விவகாரங்கள், 13ஆவது … Read more

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மாதம்பே, கடுபொத, தங்கல்ல, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பிரதேசங்களில் இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவர். இதேவேளை, ஹொரபே புகையிரத நிலையதத்தில் வைத்து புகையிரதயத்துக்கு ஏற முற்பட்ட ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததனால்  ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயிர் செய்கைக்கு பயன்படுத்தாத காணிகள், பசுமை வீட்டு தோட்ட வீட்டுப்பயிர்ச்செய்கைக்கு ……..

இதுவரையிலும்,  விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத பல காணிகள் அரச நிறுவனங்களின் கீழ் காணப்படுகின்றன. அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம் – 2022’ என்ற திட்டத்திற்காக இந்த காணிகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள்பட்டுள்ளது இது தொடர்பான அனைத்து தகவல்களும் காணி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர்; எஸ். எம் சந்திரசேன கூறினார். ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம்; – 2022’  தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற … Read more

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் – இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேச்சுவார்த்தை

கொழும்பில் நடைபெற்று வருகின்ற 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை 2022 மார்ச் 28ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, கொழும்பிற்கும் புது டில்லிக்கும் இடையிலான பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை இரு அமைச்சர்களும் மீளாய்வு செய்தனர். உறவுகளை ஆய்வு செய்த … Read more

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு புதிய கௌரவ தூதுவர் நியமனம்

வியட்நாமின் ஹோ சி மின் நகரிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராக ஷெர்லி மார்குரைட் ஹொப்மன் அலுவிஹாரே இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் தூதரக விவகாரங்கள் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து 2022 மார்ச் 23 ஆந் திகதி ஹா நோயில் அவர் தனது பதவியைப் பெற்றுக் கொண்டார். ஹொப்மன் அலுவிஹாரே கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்ற அவர், வோக்கர்ஸ் … Read more

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை ………

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி முன்வைத்த யோசனை குறித்துப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் – கடற்றொழில் அமைச்சருக்கு இடையே விசேட சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது. பருத்தித்துறை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர். இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து இலங்கை … Read more

கடற்பரப்புகளில் வானிலை கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது … Read more