இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன்

இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது. இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது. இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய … Read more

சீகிரியா நாட்டின் முதலாவது சூழல் நேய சுற்றுலா வலயம் – உள்ளக விமான வசதிகளுக்கும் நடவடிக்கை

பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீனற்ற நாட்டின் முதலாவது சுற்றாடல் நேயமிக்க சுற்றுலா வயலமாக சீகிரியா இந்த வருடம் பெயரிடப்படவுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, மத்திய கலாசார நிதியம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சிகிரியாவைப் பார்வையிடச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சிகிரியாவை அண்மித்த பகுதியில் உள்ளக விமான … Read more

பங்கபந்து கபடி வெற்றிக் கிண்ண தொடர்: இலங்கை அணி பங்கேற்பு

பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து கிண்ணக் கபடிப் போட்டியில் இலங்கையிலிருந்தும் கபடி அணியொன்று பங்கேற்கவுள்ளது. இந்த கபடி சுற்றுத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறும். பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை:முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் எரிசக்தி காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய … Read more

நீர் துண்டிப்பை தவிர்க்க, நிலுவைப பணத்தை செலுத்துமாறு அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக நீர்விநியோக வழங்கலினால் 7.5 பில்லியன் ரூபாவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியிருப்பதாக வடிகாலமைப்புச் சபையின் மேலதிக முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார். அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு பல முறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு பாவனையாளர்கள் பலர்  உரிய வகையில் பதிலளிக்க தவறிவிட்டனர். அதனடிப்படையிலேயே அவ்வாறனவர்களின் … Read more

கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது… இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் அண்மையில் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர … Read more

இயற்கை வளங்கள் சார்ந்த முரண்பாடு: தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை வளங்கள் சார்ந்த முரண்பாடுகளை அடையாளப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை காண்பதற்கான கலந்துரையாடல் நேற்று  (16) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகளும், பன்நாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் இணைந்து வரலாற்று ரீதியான மற்றும் புவிச்சரிதவியல் பிரதேசங்களை வரைபடமாக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டமானது இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதப் பதிக்குள் வரைபடமாக்க திட்டமிட்டுள்ளது. இதன்போது … Read more

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் வீராங்கனை சாதனை

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் கோப்ரல் கே.எல். சச்சினி பெரேரா, கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தனது 3.65 மீற்றர் முந்தைய இலங்கை சாதனையை போட்டியின் இரண்டாவது சுற்றில் முறியடித்தார் மற்றும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.70 மீற்றர் என்ற புதிய இலங்கைக்கான சாதனையை படைத்ததோடு வரவிருக்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை தடகள விளையாட்டு வீரர்களின் தெரிவுப் … Read more

மேலும் ஒரு சிறந்த போர்வீரர் வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஓய்வு

68 வது படைப்பிரிவின் தளபதியான இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார 34 வருடங்களுக்கும் மேலான உன்னதமான சேவையை நிறைவுசெய்துடன் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறும் தருவாயில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் திங்கட்கிழமை (14) இராணுவத் தலைமையகத்தின் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடனான கலந்துரையாடலின் போது பல்வேறு பதவிகளில் அர்ப்பணிப்பு மற்றும் அவரது பணிகளைப் பாராட்டியதுடன், அவரது விசுவாசம் மற்றும் … Read more

எகிப்து தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. மஜித் மொஸ்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (மார்ச், 16) இடம்பெற்றது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எகிப்து தூதுவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் … Read more