குழந்தைகளுக்கான தரமற்ற பால் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குழந்தைகளுக்கு பால் வழங்க பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் அங்கீகரிக்கப்படாத போதிலும், பொலிகார்பனேட்டினால் (Polycarbonates) தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பால் போத்தல்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் தரமான பால் போத்தல்களை தயாரிப்பவர்களுக்கு அனுமதி வழங்கும் வசதிகள் இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் கொண்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தேசிய … Read more

மீன்பிடிப் படகுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி – இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடல்

மீன்பிடிப் படகுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சூரியக் கலம் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக்கூடிய கலப்பு பொறிமுறையினை மீன்பிடிப் படகுகளில் பொருத்துவன் மூலம் எரிபொருள் செலவீனத்தினை  கட்டுப்படுத்தி பெருமளவு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்,  சூழல் மாசடைதலை தவிர்த்து, சுற்றுச்சூழல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். இது தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி கடற்றொழிலாளர்களுக்கு நன்மை … Read more

மாலைதீவில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு, 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் நிறைவு

ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 மார்ச் 09 மற்றும் 10ம் திகதி மாலைதீவுக் குடியரசில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாலைதீவு, இந்தியா, இலங்கை மற்றும் மாநாட்டின் புதிய உறுப்பு நாடான மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அதேவேளை, பங்களாதேஷ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தொடரில் 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: களுத்துறையிலிருந்து காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக,கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் திரவ பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவியது. அடுத்த மாதம் முதல் திரவ பாலையும் பால் மாவையும் சந்தைக்கு விநியோகிக்குமாறு … Read more

மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது . இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அண்மையில் … Read more

நான்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இம்மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைந்தன. பிரான்ஸ் கடற்படையின் ஆதரவு மற்றும் உதவிக் கப்பல் ‘லோயர்’ செவ்வாய்க்கிழமை (08) கொழும்பை வந்தடைந்த அதேவேளை, பங்களாதேஷ் கடற்படையின் கொர்வெட் பிஎன்ஸ் ‘புரோட்டாஸா’ மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களான ‘தல்வார்’ மற்றும் ‘பிரம்மபுத்ரா’ ஆகியவை புதன்கிழமை (09) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தாக கடற்படை … Read more

2022 மாச்சு 09 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை அபிவிருத்தி முறிகளின் ஏலம்

2022 மாச்சு 09 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை அபிவிருத்தி முறிகளின் ஏலம்

தேவையான எரிபொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு

தற்போது நாட்டில் போதியளவு டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் . 34 ஆயிரம் மெற்றிக் தொன் கொள்ளவுடைய ஒரு கப்பல் தற்போது வந்துள்ளது. இதன்படி நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.  மின்நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளும் வழங்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் கொள்கலன் வாகனங்களுக்காக நிவாரண வேலைத்திட்டம் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 30 வருட காலம் நிலவிய … Read more