இலங்கை தேயிலை விலையில் சாதனை

பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் “சிலோன் தேயிலை ” கொள்வனவாளர்களில் இரண்டாவது பெரிய நாடக ரஷ்யா திகழ்ந்தது.இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட தரகு நிறுவனம் போர்ப்ஸ் அண்ட் வால்கெர் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்ட பொருளாதார தடைகளால் ரஷ்ய ரூபிள் நாணயம் … Read more

நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி

கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நோயியல் பிரிவு அறிக்கை தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது … Read more

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் ,பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்தது…  

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது. செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் … Read more

உலகளவில் கொரோனா தொற்றினால் 44.81 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 81 இலட்சத்து 75 ஆயிரத்து … Read more

இலங்கையின் வணிகப் பிரதிநிதிகள் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கை வணிகக் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையே ரஷ்ய வர்த்தக சமூகத்துடனான சந்திப்பொன்றை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 பிப்ரவரி 09ஆந் திகதி ஒரு ஏற்பாடு செய்தது. மொஸ்கோ வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவர் விளாடிமிர் பிளாட்டோனோவ் தொடக்க உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களை வரவேற்ற அவர், தொழில்முனைவோர்களிடையே நேரடி உரையாடலை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்க நேரில் சந்திப்பது முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வந்த தூதுக்குழுவினரின் விஜயத்திற்கு நன்றி தெரிவித்த … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08 ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை கொள்முதல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சளினை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இன்று (07) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் தங்காலை பழைய சந்தை வளாகத்தில் ஆரம்பமானது. கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு கிலோ கிராம் மஞ்சளினை ரூ.165 … Read more

இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலையின் உற்பத்தி ஆரம்பம்…மாகம்புரவுக்கு புதிய உருக்குத் தொழிற்சாலை …

மாகம்புர லங்கா கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலையான “லங்வா சங்ஸ்தா சிமென்ட் கோப்பரேஷன் (பிரைவெட்) லிமிடெட்” நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் மற்றும் பிரதமர் அவர்கள் நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய உருக்குத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர். 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய உருக்கு ஆலைக்கான … Read more